பக்கம்:நேசம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா183


கொண்டிருக்கிறது. சால் கவிழ்ந்ததும் ஜலம் சுழித்து, நரைத்து, ஜிலுஜிலு குளுகுளு கிளுகிளு-எனக்கு ஆறுதல் சொல்ல முயல்கிறதோ? மானேஜர் கடிதம் என் மடியில் கிடக்கிறது. "டியர் அம்பி, ஐயாம் நாட் ஸ்ாரி. எனக்கு-எங்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது? குட்லக் அவளிடம் சொல்லியிருப்பாரா? "என்னோடு வந்துவிடு நான் போன பின்னர் உன்னை உலகத்தின் ஏலத்துக்கு விட எனக்குச் சம்மதமில்லை. ’’ இல்லை முடிவு அவளுடையதா? 'உங்களுக்குப் பின் என் நிலையில் எனக்குத் துணையில்லாமல், நம் இருவருக்கும் இங்கே என்ன வேலை?" கொலை: அடுத்து தற்கொலையா? அல்லது தற்கொலை உடன்படிக்கையா? இருவரும் சிதையோடு கொண்டுபோய் விட்ட ரகஸ்யம், திடீரென்று காற்று ‘விர்ர்ர்ர்’ என்ற சத்தத்துடன் என் தோள்மேல் விசை கொண்டது. அந்தச் சிறகடிப்பு என் தோளைப் பிய்த்துக்கொண்டு சென்றது. அகன்று நீண்டு இருளாலாய இறக்கைகள். வாள் வீச்சுப்போல் கீழிறங்கி பூமியைத் தொட்டுக்கொண்டு மேலெழுகையில் பாதாளக் கொலுசுபோல் அதன் பாதங்களில் ஒரு சாட்டை தொங்கியது தடுமனாய், கறுப்பாாய், பாலாவின் பின்னல்போல், எட்டடி நீளம் நெளிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/189&oldid=1403644" இலிருந்து மீள்விக்கப்பட்டது