பக்கம்:நேசம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14லா. ச. ராமாமிர்தம்


திடீரென்று நாற்காலியை முரட்டுத்தனமாய்ப் பின்புறம் தள்ளிக்கொண்டு எழுந்து, தோள் கடையில் குறுகிய கழுத் துடன், அம்மாவை நோக்கி அப்பா வீச்சுநடை போட்டுக் கொண்டு வந்தபோதுதான், கனவு கண்டு விழித்தவன்போல், அவனுக்குச் சுற்றுப்புற விவகாரங்களின் நினைவு வந்தது. அம்மா ஏதோ துணியின்மேல் தலையைக் கவிழ்ந்து கொண்டு தைத்த வண்ணம், பானங்களை விட்டுக்கொண் டிருந்தாள்: அப்பா தன்னை நோக்கி வருவதைப் பார்க்கை யிலேதான். அவளுடைய கண்கள் பெரிதும் பெரிசாயின; பயத்தினால் விழிவெள்ளைகள் கிறுகிறுவென்று சுழன்றன. 'எல்லையை மீறி ஏதோ வார்த்தையைக் கொட்டிவிட் டோம்” என்று, அவளுக்கே அப்போதுதான் புலனாயிற்று. அப்பாவின் கோபத்தைப் பார்த்ததும், அவள் உடலெல்லாம் வெலவெலத்துத் துணி மாதிரியாகிவிட்டது. முன் மயிர் நெற்றியில் சரிய, கடற்கரையோரத்தில் வளர்ந்த சவுக்குப் புதர்போல் அடர்ந்த புருவத்தினடியில் இயற்கையிலேயே மஞ்சள் ஆத்த மேட்டுவிழிகள் பளபளக்க மூக்குநுனியும் அதனடியில் புது மீசையும் துடிதுடிக்க, ஆப்பா பல்லைக் கடித்துக்கொண்டு: நேரே பட்டாளத்து லாரி மாதிரி அம்மா வை நோக்கி வந்தாள். 'இல்லை, வேண்டாம்! வேண்டாம்! ஐயோ!...” என்று கத்தக்கூட நேரமில்லை; குரல் தொண்டையில் உறைந்து போயிற்று. அப்பா நேரே வந்து அம்மாவின் முதுகில் ஓங்கி ஓர் அறை அறைந்தார். இlச் என்று ஒர் அலறல் போட்டு, அம்மா சுவர் ஒரமாய்க் குப்புற விழுந்தாள். 'அம்மா...அம்மா!’ என்று கூக்குரலிட்டுக்கொண்டு, இவன் போய் அவள்மேல் விழுந்தான். அப்பா ஒருமுறை இவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்துவிட்டு, வழியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/20&oldid=1403443" இலிருந்து மீள்விக்கப்பட்டது