பக்கம்:நேசம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24லா. ச. ராமாமிர்தம்


அந்த உள்ள எழுச்சியில் வயிற்றைக் குமட்டி வாந்திகூட எடுத்துவிடுவானோ என்று தோன்றியது. பல்லைக் கடித்துக் கொண்டு, கண்ணை இறுக மூடிக்கொண்டான். இப்போது தனக்கு அம்பாமேல் அதிகக் கரிப்பா, அல்லது அம்மாவின் மேல்தான் அதிகக் கரிப்பா என்று அவனுக்கே புரியவில்லை. அம்மாவும் அப்பாவும் புறப்பட்டுவிட்டார்கள். 'போய் வறோம். சமத்தாயிரு’’ என்று மறுபடியும் ஒரு தடவை விடைபெற்றாள் அம்மா. இவன் கவிழ்ந்து படுத்தபடியே, 'உம்' என்று முனகி, கடைக்கண்ணால் பார்த்தான். அம்மா முன்னே, அப்பா பின்னே நடந்தார்கள். அப்பா மீண்டும் ஒருமுறை இவனைத் திரும்பிப் பார்த்தார். அடேடே! இத்தனை நேரமும் இவன் கவனிக்கவேயில்லை. அப்பாவின் முகத்திலே புதிதாய் முளைத்திருந்ததே அந்தத் துளிர் மீசை, அது...அதை இப்போது காணோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/30&oldid=1403467" இலிருந்து மீள்விக்கப்பட்டது