பக்கம்:நேசம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடு33


'வாஸ்தவம், அவர் வழிப்போக்கன். நான் ராப்பிச்சை. எனக்கு மூலைப் பழையதைப் பிழிந்து வெச்சுடலாம். சமயத்தில் நானே உனக்கு மிச்சப் பண்டம்தான். முடிந்தால், வாழைப் பூ மடலில் குப்பையோடு குப்பையாய் வாரி விடுவாய்-’’ '"துணியை எங்கே உலர்த்தலாம்? கூடத்தில் அவர் குரல் கேட்டு, அவசரமாக வெளியே வந்தான். கூடத்து வெளிச்சத்தில் அவரைக் கண்டதும் பிரமித்து நின்றான். துணியைத் தோய்த்த கையுடன் அவரும் குளித்து விட்டிருந்தார். யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டாற் போல் மேனி செந்தழலடித்தது. விழியேரம் செவந்திருந்தது. குளித்ததனாலோ! விற்புருவங்களினடியிலிருந்து விழிக்கதிர் அவன் நெஞ்சைத் துருவிற்று. அவன் மார்புள் ஏதோ கணப்பு பரவுவதை உணர்ந்தான். அவன் கைகள் கூப்பின. வழிப்போக்கன்? சன்னியாசி? தேசாந்தரி? ரிஷி? அந்த வயதுக்கு உடம்பில் ஒரு துளிச் சதைப் பிசிர்கூட இல்லை. அவருக்கு என்ன வயதிருக்கும்? நிர்ணயிக்க முடிய வில்லை. அவர் கையில் பிடித்திருந்த வேட்டியின் கொசுவத் தின் துல்லியம் அவன் நெஞ்சில் புலுபுலுத்தது. உலர்த்தனும் போல் ஆசையாயிருந்தது. ‘'இப்படிக் கொடுங்கள், நான் உலர்த்தறேன்.-- அவர் பார்வை கூடத்தைச் சுற்றி அலைந்தது. "பரவாயில்லை, கொடுங்கள். நான் உலர்த்தறேன். என் தகப்பனார் இருந்தால் அவருக்குச் செய்யமாட்டேனா: நே.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/39&oldid=1403462" இலிருந்து மீள்விக்கப்பட்டது