பக்கம்:நேசம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34லா. ச. ராமாமிர்தம்


'தகப்பனார் மேல் சபலத்துக்கு வயது தாண்டிப் போச்சுன்னு நினைக்கிறேன். பிள்ளை கை சிசுருஷையை வாங்கிக்க ரெண்டு பேருமே பாக்கியம் பண்ணியிருக்கனும்.' பேசிக்கொண்டே தேடும் அவர் நாட்டம். வாசல் தாண்டியதும் குறுகிய ரேழியில் கட்டியிருக்கும் நைலான் கயிறு மேல் விழுந்துவிட்டது. நிமிஷமாக உலர்த்தி, பட்சமாக வேட்டியை ஒருமுறை தட்டிவிட்டு மீண்டும் படிக்கட்டு மேடையில் அமர்ந்துவிட்டார். இடுப்பு வேட்டி ஈரம். ஆனால் அது இடுப்பிலேயே காய வேண்டியதுதான். அவன் நின்றபடி தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டான். எங்கேயோ ரோசமாயிருந்தது. நெஞ்சில் எங்கோ சிலாம்பு உறுத்திற்று. 'ஏன், 43 வயதில் எனக்குத் தகப்பனார் இருக்கப் படாதா?’ தனக்குத்தான் முனகிக்கொண்டான். ஆனால், வந்தவர் துடித்து எழுந்தார். 'அபவாதம்! அபவாதம்! நான் அந்த அர்த்தத்தில் சோல்லவில்லை. என் தகப்பனார் ஐம்பதுகூட நெருங்க வில்லை. எனக்கு இருபத்திமூனாவது வயதில் காலமாகி விட்டார். என்னுடைய முதல் சம்பளத்தை அவர் கையில் கொடுத்து நமஸ்கரிக்க எனக்குக் கொடுத்துவைக்கவில்லையே என்கிற ஓயாத அரிப்பு, இத்தனை நாள் கழித்தும் என்னை அறியாமல் என்னை ஏதோ ஊறப் பண்ணிவிட்டது. நான் என்ன அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் தப்பு தப்புத்தான்! தாயே என்னைப் பொறுத்துக்கோ.' அவருடைய வேதனையைக் கண்டு, அவன் மிரண்டு. போனான், நீங்கள் இந்த அளவுக்குப் பாராட்டும்படி ஒண்ணும் சொல்லிவிடவில்லை.” 'இல்லை, அது அப்படியில்லை. இந்த வயசிலும் வாயை அலம்பற நிலையிலிருந்தால் இந்த வயசு இருந்ததற்கு என்ன அர்த்தம்? உசிரோடு எல்லாரும்தான் இருக்கோம். உகிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/40&oldid=1403472" இலிருந்து மீள்விக்கப்பட்டது