பக்கம்:நேசம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36லா. ச. ராமாமிர்தம்


சண்டையென்னவோ உப்பு-புளியில்லாத விஷயம்தான். உண்மையில், உப்பு-புளியில்தான் ஆரம்பித்தது, ரனத் திலோ, குழம்பிலோ இப்போ ஞாபகமில்லை, மறதியாக உப்பை இருமுறை போட்டுவிட்டதோடல்லாமல், தவறு நேர்ந்துவிட்டதையும் ஒப்புக்கொள்ளாமல், அப்பாவுக்குத் தான் நாக்குக் கோளாறு என்று வம்பு செய்தாள். தர்க்கம் முற்றி வம்சாவளியில் பாய்ந்ததும், 'உங்கள் அம்மா கையில் இதைவிட உப்பு நீங்கள் தின்று இந்தக் கண்ணாரக் கண்டிருக் கேன்’ இதுமாதிரி ஏதோ பேத்தினதும் -அவ்வளவுதான் கூடத்தில் நிமிஷம் வெடித்தது. அப்பா, கையை உதறிக்கொண்டு கலத்தைவிட்டு எழுந்தார் -நாங்கள் உட்கார்ந்த இடத்தில் பயத்தில் அப்படியே உறைந்துபோனோம்-கையை அலம்பிக்கொண்டு, பூஜை அறையில் காத்ரெஜைத் திறந்து, தனக்கு வேண்தை எடுத்துக் கோண்டு-தன்குழந்தைகளைத் திரும்பிக்கூடப் பார்க்க வில்லை-சொக்காய்கூடப் போட்டுக்கொள்ளவில்லை, மேல் துண்டோடு வாசற்படியிறங்கினவர்தான். இன்னும் பார்க்கம் போகிறோம். எல்லாம் சாயந்திரம் திரும்பி வந்துடுவான்னு நேனைச் சோம். எனக்கு நன்னா இதுமட்டும் நினைப்பிருக்கு, அவருக்குப் பிரியமான வெங்காயத்துள்ள் பஜ்ஜி போட்டு அம்மா வெச்சிருந்தாள். சிங்கம்:மாதிரி உத்யோகம் கொள்ளை வசதிகள், இத்தனையும்;விட்டு மனுஷன் எங்கே போனான்? எப்படிப் போகத் துணிஞ்சுது? முடிஞ்சுது? கம்பெனி, பத்திரிகையில் விளம்பரம் செய்தது. சல்லடை போட்டுச் சலிச்சுப் பார்த் தாச்சு. பூமி விழுங்கிவிட்டது. அப்பவும் அம்மாவுக்குத் தன் வாழ்வுக்கு உலை வந்தது பெரிசாகப் படவில்லை. அவளுடைய தோடைக் காணோம் என்று மூலு நாளைக்கு விடாமே அலர்த்தினானே பாக்கனும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/42&oldid=1403474" இலிருந்து மீள்விக்கப்பட்டது