பக்கம்:நேசம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடு37


இத்தனைக்கும் அவளுடைய தோடு இல்லை. பாட்டிவி னுடையது. அப்படியே அப்பா எடுத்துச் சென்றிருந்தாலும், அவருடைய தாயாரின் தோடுக்கு, அவருக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் கிடையாது. மற்றப்படி, அம்மா சொத்தம் கொண்டாடும் நகைகள், பண்டங்கள் எல்லாம் அப்படி அப்படியே காத்ரெஜில் இருந்தன. அவைகூட அவர் வாங்கினவைதான்; அவர் பண்ணிப் போட்டவைதான். அம்மா பிறந்த வீட்டிலிருந்து கொட்டிக் குவித்துக்கொண்டு வந்துவிடவில்லை. இதை நாங்களே பொறுமையிழந்து என்றேனும் இடித்துக் காட்ட நேர்ந்தால்... "ஆமாம் பொண்ணைத்தான் கொடுப்பா. இன்னும் வேறு என்னத்தைக் கொடுப்பா?" எதற்கும் ஒரு பதிவில் அம்மா கில்லேடி. திடுதிப்புனு அப்பா போயிட்டாரே ஒழிய யாரையும் தடுத்தெருவில் நிறுத் திவிட்டுப் போகவில்லை. உயிலே எழுதி விட்டுப் போயிருந்தர்ர். அவர் வழியில், ஆயுசுகட்டை எனும் முன்யோசனையோ என்னவோ? என் தாய்வழியில் ஆயிரம் பிறை பார்த்தவர்கள் இன்னும் இரண்டு மூன்றுபேர்கள் இன்றும் பல்கெட்டியாக இருக்கிறார்கள். ஆகையால், என் அம்மாவுக்கு ஜீன்ஸ் ப்ரகாரம் ஆயுசு கெட்டிதான். அப்பா எதையுமே திட்டம் போட்டுச் செய்வார். அது அவருக்குப் பிடிக்கும். அவருடைய சுபாவம். ஆபிசிலும் அவர் மேஜை சுத்தம். ஆபிஸ் சாவிகள், ஆபிசுக்கு ரிஜிஸ்தர் தபாலில் அவர் காணாமல் போன அன்றே வந்து சேர்ந்த தாகப் பின்னால் அறிந்தோம். அப்படி ஒன்றும் குறைகூறும்படியும் வைத்துவிட்டுப் போகவில்லை. அப்பா, கைராசிக்காரர், பொன்னன். ஆ. ப்பவே கணிசமாகச் சேர்த்து வைத்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/43&oldid=1403475" இலிருந்து மீள்விக்கப்பட்டது