பக்கம்:நேசம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38லா. ச. ராமாமிர்தம்


அப்பா, அப்படி ஒன்றும் முன்கோபியுமல்ல. யாருடனும் அதிகம் பேசமாட்டார். அம்மா நேர் எதிர். டேசிப் பேஇயூே. அரித்து எடுத்துவிடுவாள். அவளை அப்பா எப்படி அது. வரையே சகித்துக்கொண்டிருந்தார் என்பது நாளாக ஆகப் பெருகிக்கொண்டேயிருக்கும் கேள்விக்குறி. எட்டத்துப் பார்வையில்தான் விளிம்புக்கோடுகள் வெளிப்படுகின்றன. நாளாக ஆக அப்பாவைப் பற்றி நினைக்கையில் அதுவும் ஏனோ தெரியவில்லை ஒரு வாரமா அடிக்கடி நினைப்பில் வருகிறார்; ஏதோ மலைத்தொடரைப் பார்க்கிற மாதிரி விருக்கிறது. மலைத்தொடர் வளர்ந்துகொண்டே போகிறது. தொடரின் முடிவு எங்கே? தொடரின் மறுபக்கம் என்ன இருக்கும்? நீங்கள் எனக்குச் சொல்வீர்களா? அவன் குரலில் தவிப்பு தெரிந்தது. லேசாக ஒரு தேம்பல் கூட வெளிப்பட்டதோ? 'சொல்வதற்கு நாம் யார்? நமக்கென்ன தெரியும்? அவள் விளிக்கும் விதம், சமயம், வழி எல்லாமே அவளு டையது. எதுவுமே நம்முடையதல்ல. நாமே நமக்கல்ல என்பதை உணர்வதுகூட அவள் கருணையால்தான் முடியும். அதுகூட நம்மில் இல்லை." அபிதா, தூக்கக் கலக்கமாக வெளியே வந்து பெரியவர் மேல் சாய்ந்தாள். "சேப்புத் தாத்தா!'-குழந்தையின் அதரங்கள் அவர் மார்க்குலையில் முத்தத்தில் ஒற்றின. கிழவருக்கு உடல் பூரா அதிர்ந்தது. அப்படியே சொகு லாகச் சரிந்து, அவர் மடியில் படுத்துக் காலை நீட்டி கடினத்தில் உறங்கியும் போய்விட்டாள். நேர்ந்த நேரம், அதைச் சொல்லும் நேரம் இல்லை. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்கு மேலும் புழுங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/44&oldid=1403476" இலிருந்து மீள்விக்கப்பட்டது