பக்கம்:நேசம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடு39


'எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு. இத்தனை உரிமையா, என்னவோ பிறந்ததிலிருந்து உங்கள் மடியில் தவழ்ந்து விளையாடின மாதிரி-இது அபிதாதானா? எனக்கு அதிசய மாயிருக்கு, விட்டுச்சொல்றேனே, உங்களைப் பார்த்தால் இப்போ பொறாமையாயிருக்கு.' "பூம் ரொய்ஞ்ஞ். மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பினதோ அல்லது நோக்கி வருகிறதோ-ஆகாய விமான ரீங்காரம் இடத்தை நிறைத்தது. அதன் முன்னணியிலிருந்து குரல் அவனை எட்டிற்று தணலில் வைத்த கனகன "அவள் நம்மை வாத்யமாக வாசிக்கிறாள். அவள் ஸங்கீதேசுவரி-நம் உடம்பின் கணக்கற்ற நரம்புகள், தந்தி கள்-நமக்குத்தான் கணக்கற்றவை, ஒவ்வொன்றின் வேர்ச் சுழிகூட-அவள் அறியாவிட்டால், அது அங்கு இல்லைஅவைகளின் ஸ்வரனுஸ்வரஸ் தானங்கள் அவளுடைய மீட்டலில் அதனதன் லாயுஜ்யத்துக்குக் காத்துக்கொண்டிருக் கின்றன. அதன்தன் தனித்தனித் தாளப்ரமாணங்கள், லயப்ரமாணங்கள் அவளுக்குத்தான் தெரியும், அதனதன் பரமாணிக்கங்களும் அவளுக்குத்தான் சொந்தம். அவள் பண்ணிக்காட்டும் ஸ்ருதிபேதங்கள் நமக்கு அப்பாற்பட்டவை. ஆனால், அவள் ஸ்ருதிலாத்தமானவள். பிந்து மாலினி. லாசநாத விநோதினி. அமிர்தவர்ஷனி: iலா கான லோலி. நாமங்கள் கம்பீர சாட்டை. அவனுக்குத் தொண்டை வெளியே குதித்துவிடத் தவித்தது. நாமங்கள், தாம் இறங்க இடம் தெரிந்து தைக்கும் ஏவு கணைகள். தகதிமி திமிதக-நெஞ்சை ஏதோ நடனம் மண்ணாய் மிதித்தது. லமகலலமகரி நிமகஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/45&oldid=1403477" இலிருந்து மீள்விக்கப்பட்டது