பக்கம்:நேசம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோடு41


விட்டுட்டு ஓடிப்போனால் அதுக்கு நான் ஆளா? திரும்பி வராத வரை, அப்பிடி இப்படி ஒண்னும் தெரியாதவரை என் மஞ்சளுக்கும் பூவுக்கும் பங்கமில்லாமல் போயிடறேன் எர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே அவளுக்குத் தெரிந்த தோத்திரம் அது ஒண்னுதான். ஒருநாள் தவறாமல் சொல்லிக்கொண்டு குத்துவிளக்கை நமஸ்கரிப்பாள். இப்படியும் ஒரு பிறவி உண்டா?’ என்று அதிசயிப்பேன். ஆனால், அவளை என்ன செய்யமுடியும்? “அவளுடைய நாமங்கள், அஸ்திரங்கள் நட்ட வேலி. அதன் பாதுகாப்பை அவளால்கூடத் தாண்டமுடியாது." பெருமூச்செறிந்தான். "எங்களைத்தான் பார்க்கிறீர்கள். நான், இவள், அபிதா. எங்களுக்கு "லேட் மாரியேஜ் காரணம்? ஜாதகத் தில் கேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமை. தோஷத்துக்குத் தோஷப்பொருத்தம் ஒருவரையொருவர் அடைய அப்படித் தேடி அலைஞ்சிருக்கோம். அ-ஹ்-ஹா'-வாய்விட்டுச் சிரித்தான், 'நாளாகித்தான் அபிதாவும் பிறந்தாள். அதற்கே எத்தனை தவம், அரசமரம், ராமேசரம். பிள்ளை எதிர்பார்த்தாள்; கிடைத்தது அபிதா, அதுவும் ஏதோ இணங்காத கருவிலிருந்து பிடுங்கியெடுத்த மாதிரி, சிரம ப்ரசவம் அதனால்தான் எனக்கு 43, அபிதா 3, அவளுக்கு முப்பத்திஅஞ்சு-அஹம்-ஆறு-’’ 'கணக்கெல்லாம் ஒப்பிச்சாச்சா? இனி சாப்பிட வரலாமா?’’ 'ஒஹோ, ஒட்டுக் கேக்கறையா? உன்னை மறந்தே போச்சு. நல்லவேளை, ஞாபகப்படுத்தினே. வயிற்றில் குழி விழுந்த மாதிரி ஒரே பசி. ஸார் எழுந்திருக்கிறேளா?’’ ராச்சாப்பாடு எனக்குக் கிடையாது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/47&oldid=1403479" இலிருந்து மீள்விக்கப்பட்டது