பக்கம்:நேசம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46லா. ச. ராமாமிர்தம்


எட்டமாட்டேன்கறது தாத்தா: தொட்டனால், ஒரு கதவு திறந்தால் பாட்டி வாசற்படியிலே நிற்கமாட்டா? என்ன தாத்தா முழிக்கிறே கோவமா? நீங்கதானே சொன்னேள், பாட்டி மானத்துக்குப் போயிட்டான்னு!" தாத்தா மூக்கைப் பலமாக உறிஞ்சிக்கொண்டார். "கோவமில்லே சொல்லிண்டு போ அவர் முகம் திடீரென மிக்கச் செவேல், கழுத்து, பிடரி வரை. "அங்கே ஒரு முள்ளு மரம் ஒத்தையா நிக்கும். அதன் கீழே உக்காந்துண்டுதான் நான் வாசிப்பேன். ' பாடமா?’’ அட போ தாத்தா! புல்லாங்குழல்:" அவர் முகத் தெதிரே அதை ஆட்டினான்.

  • ஏது இது'ே $ தோல்ல மறந்துத்தேனே! பத்து நாளைக்கு முன்னாலே அதே மரத்தடியிலே கிடந்தது.'
  • உனக்கு முன்னாலேயே வாசிக்கத் தெரியுமா? யார் கத்துக் கொடுத்தா?’’

நானேதான்." ஒஹ்ஹோ மாலி: பேப்பர் பின்னாலிருந்து. மொதல்லே வயித்தை உப்பி தம் புடிச்சி ஊதிஊதி முடியல்லே. சத்தமேவல்லே. அப்புறம் அலுத்துப்போய் ஒரு பெருமூச்சு அதுலேபட்டு உள்ளேருந்து கொஞ்சிண்டு ஒரு குரல் வந்தது. பாருங்கோ ஒ1 அப்படியா சமாச்சாரம்னு தெரிஞ்சுடுத்து உப்பி உப்பி ஊதக்கூடாது. ஸ்ன்னமா ஊதனும் குட்டி குட்டியா குருவி குருவியாசத்தம் தாத்தா. தாத்தா, சத்தம் இந்த எட்டு ஒட்டைக்குள்ளும் கூடு கட்டி விருக்குமா? அப்பப்போ இரைதேடப் பறந்துபோயிடுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/52&oldid=1403483" இலிருந்து மீள்விக்கப்பட்டது