பக்கம்:நேசம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசம்47


அப்பப்போ திரும்பி வருமா? இதனுள்ளே அதனிஷ்டத்துக்கு இருக்கும்போல் இருக்கு. ஒரு குருவியே உள்ளே ஒடி ஒடி விளையாடறதா? தனித்தனியா எட்டு குருவியா?” இவன் இங்கே ஏன் தப்பிப் பிறந்தான்? 'விரலாலே தடவிக்கொடுத்தால் முதுகை நெளிஞ்சு கொடுக்கறது தாத்தா: பிரியமாயிருக்கு தாத்தா? ஆனால் கண்ணுக்கு ஏன் தெரியமாட்டேன்கறது? பட்சியிலே இப்படி ஒரு ஜாதியா தாத்தா?’’ தாத்தா பாட ஆரம்பித்துவிட்டார். "வானத்தில் ஒரு மயிலாடக் கண்டேன். மயிலும் குயிலாச்சுதடி" சாரீரத்தின் வெண்கல நாதத்தில், கூடத்துள் திரண்டு இறங்கிக்கொண்டிருக்கும் மாலையிருள். திரை மடிகள் அசைந்தன. சுவர் மூலைகளில் கட்டிலுக்கடியில் கவருக்கும் சுவாமி படங்களுக்கும் இடைவெளியில் கூரையின் விட்டங் களில்...இருள் அலைகள் சுருண்டு வந்து பந்தாக... 'கக்கடா கடகடா கக்கடா." இந்த நேரத்துக்கே காத்திருந்தாற்போல் இதென்ன சத்தம்? பட்சியா பூச்சியா, வேறேதேனும் ஜந்துவா? வானமாதேவி தன் கூந்தலை அவிழ்த்துவிட்டாற்போல, கறுக்கலில் ஒரு பளபளப்பு, மெருகு ஏற ஆரம்பித்துவிட்டது. அவிழ்ந்த கூந்தலில் பூக்களென மீன்கள் கொத்தாயும் தனி யாகவும் சுடர்விட்டன. நேரத்தில் ஒரு நறுமணம் அமானுஷ்யம், இன்ப அபாயம், ரகஸ்யத்தின் மலர்ச்சி பையனுடைய விரல் நுனிகளடியில் புல்லாங்குழலி லிருந்து குருவி மூக்குகள் செல்லமாகக் கொத்தின. வாசிக்கண்டிருந்தேனா? அப்போ தாத்தா, பாறாங்கல் பின்னாலிருந்து தல்ை எட்டிப் பார்த்தது. நீண்டுண்டே வந்தது. நன்னா நீளமாயிடுத்து. தெருவிலே வேடிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/53&oldid=1403484" இலிருந்து மீள்விக்கப்பட்டது