பக்கம்:நேசம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48லா. ச. ராமாமிர்தம்


காட்டறாளே முதுகுலே படார் படார்னு தன்னையே அடிச் கண்டு அந்த ஜாட்டியாட்டாம், தடியா நீளமா, அது வெள்ளை, இது அட்டக்கரி.” "உனக்குப் பயமில்லையா?’’ 'வாசிச்சுண்டேயிருந்தேன் தாத்தா நாக்கு சுளுக்கிண்ட மாதிரி வலிச்சது. ஆனால் நிறுத்திட்டேன்னா என்னமானும் பண்ணுமோன்னுதானிருந்தது. கேக்க வந்திருக்கே அதோ அம்மா இருக்காளே, அந்த துரத்துலே அது இருந்தது; தின்னுடுத்து. ஒண்னும் பண்ணல்லே. நாங்க பேசின் டோமே தாத்தா!' பேஒன்டீர்களா, என்ன பேசினீர்கள்?’ என்று கேட்கப் பயமாயிருந்தது. பையன் தோட்டிருக்கும் கட்டம் அப்படி, அவன் சொல்லில் அவனுக்கு எள்ளளவுகூட சந்தேகமற்ற நேரம். காண்பதெல்லாம் அதன் சத்யத்தை வெளிப்படுத்தும் நேரம். இதயம் அதன் கமலம் விரியும் சமயம். முத்துச்சிப்பி காத்திருந்த மழைத்துளியை, வயிற்றுள் வாங்கிக்கொண்டு வாய்மூடும் தருணம். பட்சதேவன் புஷ்பத்துள் புகுந்துகொண்டதும், பூவின் இதழ்கள் குமிழும் நேரம். லர்வே ஜூனோஸ்-கினோ பவந்து: ஸ்ர்வம் ப்ரேம மயம்: ப்ரம்மம், த்யானம் கலைந்து . புவனத்துக்கு ஆசியில் அபயஹஸ்த முகூர்த்தம். "என்ன பேசிண்டேளோ? அவருக்குக் கேட்கத் தைரியமில்லை. கேள்வி மூச்சாகத்தான் வந்தது. . சொல்லத் தெரியல்லே தாத்தா! செடியினின்து காம்பு கழன்றுகொண்டிருக்கும் ஆப்போல் அவன் கரம் தவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/54&oldid=1403485" இலிருந்து மீள்விக்கப்பட்டது