பக்கம்:நேசம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசம்49


ஆனால் எங்களுக்குள் ஒரு நேசம்-என்ன தாத்தா உங்களுக்குத் தூக்கிப் போடறது?’’

  • என்ன சொன்னே?”

"நேசம்-சினேகம், ஃப்ரண்ட்ஸ்-பாடப் புஸ்தகத்தில் வந்திருக்கு தாத்தா!' "சரி, அப்புறம்,’’ "அப்புறம் ஒண்னும் இல்லை. கொஞ்சநேரம்தான். தானாவே வந்தவழியே போயிடுத்து. நாக்கை நீட்டி நீட்டி... அதுக்கு ஏன் நாக்கு கிழிஞ்சிருக்கு?’’ தாத்தா ஏதும் பதில் பேசவில்லை. "தாத்தா தாத்தா!" இல்லை. அவர் பதில் பேசமாட்டார் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. அவன். அவர் மடியிலிருந்து இறங்கினான். நேரம் அதன் பிறகு கலைந்துவிட்டது. தள்ளாடித் தள்ளாடி மாடிப்படி ஏறினான், சின்ன, பசங்க ஸ்டைல். மாடியில் ஒரு ஒதுக்கம் இருந்தது. அறையு மில்லை தடுப்புமில்லை. மொட்டை மாடிக்கு வாசற்படி தாண்டுமுன் ஒரு அகல, பெரிய வாசற்படி என்று சொல், லாம். நவராத்திரி கொலுப்பெட்டி, வேண்டாத கண்டான் முண்டான், காதறுத்தானுக்கு இடம் ஆனால் அது அவன் இடம். தனியிடம் யாரும் வரமாட்டார்கள். பெரியவருக்குத் துாக்கம் வரவில்லை. வெகுநேரம் படுக்கையில் புரண்டு பார்த்துவிட்டு, எழுந்து, கூடத்தில் உலவினார். மீண்டும் படுக்கையில் உட்கார்ந்தார், இருப்பு கொள்ளவில்லை. s ‘‘அடியே தேசம், மோசம் பண்ணியேடி: ஸ்பரிசம் உறுதுணை, அதற்கு வயது கிடையாது. அம், தாலியைத் தொட்டுக் கொண்டு பால் குடிக்கும் குழவியி லிருந்து ஆண்டவன் அப்படி ஒரு வேடிக்கை காட்டுல்தான்; நே.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/55&oldid=1403486" இலிருந்து மீள்விக்கப்பட்டது