பக்கம்:நேசம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசம்51


உனக்குத் தெரியாதோ என்னவோ, கோள்ளி நான்தான் போட்டேண்டி ஸ்ன்னதித் தெருவில் கோவிலுக்கு மூணாவது வீடு நம்மது பிள்ளை ஊரிலிருந்து வரவரை சுவாமி இன்னும் எத்தனை வேளை பட்டினி போட முடியும்? புழுங்கிப் புழுங்கிச் சாகாமல் சாகறேண்டி, பாவி இங்கே நான் வரதுக்கு உண்மைக் காரணம் வேறு. முள்ளாம், கல்லாம், உன்னை என்னிடமிருந்து எது பிடுங் கிண்டுப் போச்சுங்கறதுக்கு மை போட்டுப் பார்க்கணுமா? ஒருநாள், ராத்ரி பூரா உன்னை நெனச்சு நெனச்சு விடிகாலை வெறிபிடிச்சவனாயிட்டேன். கடப்பாறையை எடுத்துண்டு ஒடிப்போயி புற்றை இடிச்சுத் தள்ளினேன். உள்னே ஒண்ணும் இல்லை. இடம் மாறிடுத்தோ, இல்லை எப்பவுமே இல்லைதானோ? - காரியம் முடிஞ்சதும் எனக்குத் 'திக்பக்கு" ஆயிடுத்து, ஊருக்குப் பதில் சொல்வியாகணும். தற்செயலாக அன்னி மத்தியானம் இவனிடமிருந்து எழுத்து வந்ததும் ராத்ரியே வண்டி ஏறிவிட்டேன். நேற்று உனக்கு நாலாவது மாவியமடி திடீரெனத் தாழம்பூ மணம் கிளம்பிற்று. ஜன்னல் வழி எட்டிப்பார்த்தார். நிலா பட்டை வீறிட்டுக் கொண்டிருந்தது செம்பருத்தம் செடியடியில் சலசல-தான் தனியாக இல்லை என்னும் உணர்வு. அதன் நடமாட்டம் இருந்தால்தான் இது மாதிரிக்கு பீர் வாஸ்ம்-பழி வாங்கணும்னா எங்கிருந்தாலும் வந்துடுமாமே! அதோ அதோ, சீறல் சத்தம் ஏதேனும் கேட்டுதோ? பிடரி குடைக்கம்பி;போல் விறைத்தது. நேசம் நேசம், என்னடி நடக்கிறது. சொல்லேண்டிர் - அவள் முகத்தை நிலாவிடம் தேடி அவர் முகம் பதிலுக்குத் தவித்தது. சந்திரன் வெற்றிகரமாக மேகங்களை சவாரி செய்துகொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/57&oldid=1403488" இலிருந்து மீள்விக்கப்பட்டது