பக்கம்:நேசம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறந்த பால் அண்ணா சதுக்கம் வந்ததும் எனக்குக் கால்கெஞ்சல் தாங்கமுடியவில்லை. ஸான்தோமிலிருந்து நடக்கிறோம். "பூரீகாந்த், இங்கே உள்ளே போய் மணலில் உட்காரு வோம். ’’ . - புன்னகை புரிந்தான். 'கோட்டை வரை போவதாக அல்லவா நம் ப்ளான்?" ‘'இப்போ என்னால் முடியல்லே. என்ன சொல்றே?" எனக்கு எரிச்சலாக வந்தது. "நான் கிழவனில்லை. நீ வயசுப் பிள்ளை. குவாயிட்டுக்கே நடந்து போயிடுவே.” அவன் முகம் லேசாகக் கறுத்தது. "நான் மட்டும் நடந்துட்டு வரேன். நீங்கள் இங்கேயே இருங்கோ.' "நோ. நீயும் என்னோடு வா. வயதானவர்களுக்கு இளைஞர்களைத் துன்புறுத்துவதில் ஒரு மகிழ்ச்சி என்று அந்தக் கூட்டம் வாதிக்கும். சரி, அது எங்கள் வயதின் நியாயம். மூச்சைப் பிடித்துக்கொண்டு சென்று கரையோரம் ஒரு மடகின் அடியில் துண்டை விசித் துப் படுத்துவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/59&oldid=799063" இலிருந்து மீள்விக்கப்பட்டது