பக்கம்:நேசம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54லா. ச. ராமாமிர்தம்


எல்லாம் மெரீனாதான். ஆனால் இங்கு ஜன நட மாட்டம் சற்று மட்டுத்தான். காற்றின் தன்மை இமைகளின் மேல் திண்ணமாய்த் தெரிந்தது, விழிகள் களைப்பின் ககத்தில் செருகின. வானிலமும், அலைகளுக்கப்பால் கடல் விளிம்பும் அமைதியில் இழைந்தன, என் அரைக்கண்ணில் பூரீகாந்த் என் அருகே உட்கார்ந்தபடி மணலை அணைந்து கொண்டிருந்தான். அவரவர் சிந்தனையில் அவரவர். துரீகாந்துக்குக் கொஞ்சம் மந்த முகம் என்று என் அபிப் பிராயம் - அவன் அம்மை அவனைக் கறந்த பால் என்கிறாள். அவ்வளவு வெள்ளை மனசாம். பிள்ளைகள் ஒவ்வொருத் தனையும் அப்படித்த்ான் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு அண்ணன் டாட்டாவில் வேலை பார்க்கிறான். மற்றவன் எச்.எம்.டி. இரண்டு பேரும் நல்ல சம்பளம் வாங்குகிறார் கள். ஆனால் இரண்டு பேருக்கும் போதவில்லை . இல்லைப் பாட்டு மன்னர்கள் அவனவனுக்கு அவனவன் குடும்பம். அந்தத் தத்தளிப்பில் தகப்பனாவது, தாயாவது , தம்பி யாவது? பாவம், அவள்தான் அங்கலாய்ப்பாள் சில சமயங் களில். ஆனால் வேர்கள் விட்டுப் போய்விடுகின்றனவே!" 'மாமா முறுக்கு வாங்கிக்கறேளா? எனக்குச் சிந்தனை கலைந்தது. அரை நினைவு சுகம் கலைந்தது. எரிச்சலாக வந்தது. ஆனால் என் நெற்றிக் கண்ணெதிரே நின்ற தோற்றத்தைக் கண்டதும் அடைந்த வியப்பில் எழுந்து உட்கார்ந்தேன். ஒரு தகர டப்பாவை இடுப்பில் இடுக்கிக்கொண்டு நின்றாள். ஒரு அலுமினியத் துக்கு. ஒரு பெரியவர் அவள் அருகே நின்றார். என் வயதிருக்கும். முகத்தில் லேசான ஒரு அசட்டுச் சிரிப்பு. உறைந்துபோன சிரிப்பு. முந்தாநேற்று ஒரு கலியானப் பரிசு வாங்க மவுண்ட் ரோடு போயிருந்தேன். என்னென்னவோ கடையில் வைத் திருக்கிறான். என்னால் முடியுமா? ஏதேதோ கண்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/60&oldid=1403490" இலிருந்து மீள்விக்கப்பட்டது