பக்கம்:நேசம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறந்த பால்55


முண்டான்களுடன் சுண்டு விரல் நீளத்துக்கு ஒரு லசுமி விக்ரஹம் அலட்சியமாகக் கிடந்தது. அதில் தொங்கும் Tag-ஐக் கவனிக்காமலே எடுத்து என்ன விலை என்று கேட்டேன். ரூ. 1825. எஸ்.டி.தனி. இப்போதெல்லாம் எங்குமே, யார் முகத்திலும் ஒரு கேலி நகை மிளிர்கிறது. ரெண்டு கன்னத்திலும் அறைகிற அறையில் அதை எடுத்துவிட்டால், வாழ்க்கையில் பாதி விடிவு உலகத்துக்கே கிடைத்துவிடும். -ஆனால் இந்த விக்ரஹம் ஏன் முறுக்கு விற்கிறது? 'மாமா, ஆத்திலேயே பண்ணினது கைமுறுக்கு நாலு சுத்து: قي بي ஆளுக்கு ரெண்டு வாங்கினேன். பரவாயில்லை. டால்டா வாசனை வே.சா. 'மாமா, ஆத்துக்கு ஒரு பொட்டலம்? கட்டட்டுமா? எத்தனை?” + ஆள் கில்லேடிதான். "ஒரு நாலஞ்சு கட்டேன். இங்கே இன்னும் ரெண்டு கொடு." - அவளுக்கு உற்சாகம் வந்துவிட்டது. டின்னைக் கீழே இறக்கினாள். முகம் இன்னும் அழகிட்டது. இவள் பேசாமல் சினிமாவில் சேர்ந்தால் நடுப்பகலில் இவள் தனியாக ரோடில் தடக்க லாயக்கில்லை. ரெண்டு ரெளடிகள் திடும் என வந்து ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் அள்ளிப்போட்டுக் கொண்டு. அப்புறம் நாலு நாளோ ஒரு வாரமோ கழித்து கோயமுத் து.ாரிலோ, ஜப்பல்பூரிலோ...நாளிருக்கும் கொடுமையை நினைக்கவே பயமாயிருக்கிறது. 'ஸார், ரெண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக்கறேளா? சூடாயிருக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/61&oldid=1403491" இலிருந்து மீள்விக்கப்பட்டது