பக்கம்:நேசம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58லா. ச. ராமாமிர்தம்


இன்று எனக்கு ராசியில்லை, கேள்வி என் வயப்பட்டு அசடாக வெளிப்படுகிறது. 'அப்படிச் சொன்னால் போதுமா? மங்களம் மனசு உடைஞ்சு செத்தாள். தொனிப்பில் லேசாக வசமிழந்த லேசான வெறி அவள் அவரைக் கவலையோடு நோக்கினாள். "பழசெல்லாம் என்னத்துக்கு இப்போ அப்பா? உங்க ளுக்கு உடம்புக்காகாது." 'இல்லை பங்கஜம். எங்கள் குடும்பங்கள் எவ்வளவு ஒற்றுமையாய் இருந்தது என்று உனக்குத் தெரியாது. நீ அப்போ குழந்தை. என்ன யக்ஞராமன், நாம் பிரிஞ்சு 15, 18 வருடங்கள் ஆகியிருக்கும்ா?” "தாராளமா. நாம் பழகினதென்னவோ ரெண்டு வருடங்களுக்கும் குறைச்சல்தான் அப்புறம் என்னை வடக்கே எங்கோ அத்துவானத்தில் தள்ளிப்பிட்டான். ஏதோ நாலஞ்சு கடிதங்கள் பரிமாறிக்கொண்டிருப்போமா?. அப்புறம் அதுவும் விட்டுப் போச்சு. ’’ 'அதுதான் வாழ்க்கை. யாரும் யாரையும் குற்றம் சொல்வதற்கு இல்லை.” ஆனால் இருந்தவரை எவ்வளவு நன்றாக இருந்தது! மொட்டை மாடியில் எத்தனை நிலாச் சாப்பாடு...சறுக்கி விழுந்தால் விருந்து பிக்னிக், கச்சேரி, டிராமா.-எல்லாமே Goffshāo; #3, 205 &mdéjà&TGari Ah, that was a beautiful lite; அழகான வாழ்க்கை எனும் நேர்த் தமிழ் நேர் அர்த்தத் தைக் கொண்டு வரவில்லை. 'நம் ஆபீசுகள்கூட விங்கிச்செட்டித் தெருவில் எதிரும் புதிருமாக வாய்க்கணுமா? நான் பாங்க், நீங்கள் இன்ஷூரன்ஸ்,’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/64&oldid=1403494" இலிருந்து மீள்விக்கப்பட்டது