பக்கம்:நேசம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64லா. ச. ராமாமிர்தம்


மங்களத்திடம் வந்து சொன்னதும், 'ஆ' என்ன?இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டாள். 'மங்களம், அதிர்ச்சியாத்தான் இருக்கும்; வருத்தமாத் தானிருக்கும். இத்தனை நாள் பழகிவிட்டோமே! ஆனால் நாம் செய்யக்கூடியது என்ன இருக்கு: கஷ்டம் பெற்ற தாயார் வேறு இருக்காள். such is life. நான் சொன்னது அவளுக்குச் சரியாகக் கேட்டதோ இல்லையோ, பாவம். ஆனால் எனக்குச் சிந்திக்க நேரம் இல்லை. அன்றிரவு நான் டில்லி பயணம். H.0.வில் மூணு வாரம் ட்ரெயினிங்.’’ ஆனால் நான் டில்லி சேர்ந்து ஒரு வாரம் ஆகவில்லை. அவளிடமிருந்து கடிதமுமில்லை; தந்தி: “Mangajam sinking, start. - İğr. Prabhakaran. இதென்ன தலையா, காலா? சென்னை வந்து சேர்ந்தால் வீடு பூட்டிக் கிடக்கு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். என்னைக் கண்டதும் டாக்டர் பிரபாகரன் முகம் சுளித்தார். "உங்களுக்கிடையில் என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அம்மா உடம்பை என்னவோ மெஸ் பண்ணிண் டுட்டாங்க. நீங்களும் கவனிக்கல்லே. நாம் எல்லாம் படிச்சவங்க. உங்களுக்காக உசிரைப் பிடிச்சுட்டு இருக்காங்க. அலாரி, மிஸ்டர், 24 அவர்ஸ் தாண்டனும்.’’ அவர்கள் தீர்ப்பு விதிக்கும் விதமே அப்படித்தான். மிஸ்டர் யக்ஞராமன், கதை எப்படியிருக்கு பார்த்தேளா? கட்டிலில், மங்களமா அது? கட்டில் கொள்ளவில்லை. எக்கண்டமா ஊதியிருந்தாள். கண்கள் கீறிய கோடு. பின் னால் தெரியவந்தது. ஊதுகாமாலையாம். சட்டென்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/70&oldid=1403500" இலிருந்து மீள்விக்கப்பட்டது