பக்கம்:நேசம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66லா. ச. ராமாமிர்தம்


கண் மூடினாள். கண் மூடியவள்தான். எனக்கு நெற்றிப்பொட்டில் ஏதோ நரம்பு அறுந்த மாதிரியிருந்தது. கண்ணை இருட்டிற்று. மடேரென்று விழுந்துவிட்டேன். மூணு மாதம் கழித்து வேறு எங்கேயோ விழித்தேன். விழிப்பாவது! பார்வை அத்தரதையாப் போயிடுத்து. அவன் களும் மாத்தி மாத்தி ஆபரேஷன் செய்து பார்த்துக் கடைசி யில் கைவிரிச்சுட்டான்கள். கண் போச்சு, வேலையும் போச்சு. நான் ஆஸ்பத்திரியில் கிடந்தபோதும், அப்புறமும் கொஞ்சகாலம் பங்கஜம் அவள் மாமன் வீட்டில் வளர்ந் தாள். அங்கேயும் வளம் இல்லை. பெண் போனபிறகு பிடிப்புக்கும் வழியில்லை. அப்புறம் தெரிஞ்சது கண்ணுப்பிள்ளை தர்பார் வெறும் காற்று அடைத்த பொட்டலம்னு அவனுக்கே கொஞ்ச நாளா வியாபாரத்தில் நஷ்டமாம். கோமாரியில், ரெண்டு முனு மாடு சேதம். கலியாணத்திலிருந்து திரும்பினதும் நகையை அவரே வாங்கிக்கிட்டாரு என்று அவன் பெண் டாட்டி அடித்துச் சொல்லிவிட்டாள். நிஜமோ, பொய்யோ? நகையைக் கண்டதும் அவனுக்குப் புத்தி எப்படி ஒடிற்றோ? அவசரத்துக்குச் சமாளிக்கலாம்னு நெனச்சிருப்பான். முழுசா அப்படியே முழுங்கிடலாம்னு அவ னு க் குத் தோணி யிருக்கும்னு நான் நினைக்கல்லே எந்த மார்வாடியிடம் அ.கு வெச்சானோ? ஏற்கெனவே வாங்கினதுக்கு எந்த ஈட்டிக்காரனுக்கு ஈடுகொடுத்தானோ? இல்லே, வீட்டிலேயே அமுக்கிட்டான்களோ? குடும்பத்தில் பூசல். தாயார், பிள்ளை, பிள்ளைக்குப் பிள்ளை...வீடு மூணு அடுப்பா பிரிஞ்சாச்சு. இப்போ அந்த நகை இன்னும் நகையா இருந் தால், இருக்கிற இடத்தில் எந்தக் குடும்பத்தை அழிச் சிண்டிருக்கோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/72&oldid=1403502" இலிருந்து மீள்விக்கப்பட்டது