பக்கம்:நேசம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம தர்மம் ஏதோ அந்த சமயத்தின் உள்ள நெகிழ்ச்சியில் அவரோக அளித்த வரத்தின் விளைவு, அந்தப் பிராமணர் இன்றுவரை கால்நடையாகவே பூதலத்தைச் சுற்றி வந்திருக்கும் துரமும் நேரமும், தடவைகளும், அதனதன் லக்கம் தாண்டி, கனக் கும் தன்னில் மூழ்கிவிட்டது. தற்சமயம்-ஏன், எச்சமயமும் அவர் அறிந்த பூமி, அவன் பாதம்பட்ட பூமி. அயோத்தியிலிருந்து தண்ட காரண்யம், தண்டகாரண்யத்திலிருந்து இலங்கை வரை ஜபித்து ஜபித்து ராமநாம நாமகோடி கோடி நாம் கோடி கோடி ராமகோடி நாம் கோடி நாமமும் மூச்சும் இரண்டறக் கலந்தபின், எது நாமம் எது ஸ்பரணை என தனக்கே தெரியாது, தனக்கே புரியாது, தன்னில் இருக்கும் தனி, தாமஸ்மரணையாகவே ஆகிவிட்ட நிலையில், இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறார்--ராம ராம. ரா. ராம ராம...! அவர்தான் அனுமன், சிரஞ்சீவி வரத்தால் யுகங்களைத் தாண்டி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். பிரம்ம ஞானங் களை ராம நாமத்தினாலேயே தெரிந்துகொண்ட பிராம் மணனாக...வயதைக் கடந்த கிழவராக...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/74&oldid=799091" இலிருந்து மீள்விக்கப்பட்டது