பக்கம்:நேசம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72லா. ச. ராமாமிர்தம்


அனுமனின் அதரங்கள் அவரையும் அறியாமல், புன்ன கையில் இளகிற்று. யாவும் விதிக்கப்பட்டவை; ஆதலின், நிகழ்வதென்பது ஒருமுறை, ஒரே முறைதான். இன்னும் நெருக்கிச் சொல்வின் நிகழ்ந்தது நிகழ்ந்ததோடு சரி; மறுமுறை என்பது அதற் கில்லை. முதல்போலும் நிழல்கள், நீழல்கள், அவைகளின் ஆட்டம் உண்டேயன்றி, முதல் மீண்டும் வருவதில்லை. அது சன்னிதானமாகிவிட்டது. அதன் முகூர்த்தத் தினின்று இனி அது இறங்கி வராது. அல்லேல் மகிமையேது, மானமேது , சத்யமேது? நேர்ந்தது சரித்திரம்; மற்றவை கதை. ஆகவே அவரவர் பக்குவத்துக்கேற்ப, தியானமும், பக்தியும், கற்பனையும், ஞானமும், சாமர்த்தியமும் சமத் காரமும் காட்டியவையை வடித்தவர்களேயல்லாது, காவியர் கள் ராமாயண ரகசியங்களைப் பூராவும் என்ன கண்டார்கள்? கண்டவர்கள் ராமசரிதத்தில் பங்கு கொண்ட நாங்கள். விண்டதையே விண்டுகொண்டிருப்பவர் இவர். இந்தச் சிதைவே, காவியங்கள் இழைக்கும் முதல் பாபம் இதைச் சுற்றி நெய்த பாஷ்யங்கள், அர்த்தங்கள், அனர்த்தங்கள் இத்தியாதி வடிகால்கள் மூலம் மறு பாவங்கள், பிற பாபங்கள் இழைக்கப்படுகின்றன. கர்மாவை யாராலும் த டு க் க முடியாது. ஆகவே, அன்று ராகவனும் அனுமனும்-(இங்கு நான் என்று என்னை பாஷை பற்றாமையில் நேரும் பாடத்தில், தனிப்படக் குறிக்க அஞ்சுகிறேன்.) இருந்த அந்தரங்க நிலையை நூல்களில் காணமுடியாது. நூல் தாங்காத அத்துணை நுட்பம், இன்பம், சத்யம். தவிர எல்லாமே எல்லார்க்குமல்ல. இதுதான் தியானத்தின் முதல் உபதேசம்: 'வாயுபுத்ர, நான் விஷ்ணு, அவள் லக:மி, ராவன சம்ஹார நிமித்தம் ராமாவதாரம், ஈதெல்லாம் சுயநலம்; சோக்கட்டானில் சோழி குலுக்கல் வேணும்போது அவ தாரம், மிச்சத்துக்கு நரன் எனப் பேசுவது நீசம். நேர்மை பற்ற தர்க்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/78&oldid=1403507" இலிருந்து மீள்விக்கப்பட்டது