பக்கம்:நேசம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம தர்மம்73


"நான் கேட்கிறேன்-யார் அவதாரமில்லை? நீ யார் மாதிரி என் பலத்தை நான் ராவணனிடம் நிரூபிக்கவில்லை. இவளிடம்தான் இன்னமும் நிரூபித்துக்கொண்டிருக்கிறேன். இதுவே என் பாடு." ராகவன் குரலில் தொனித்தது கவலையா? விரக்தியா' அதையும் தாண்டிய விசனமா? பிறவியின் விசனம் பிறவி விசனம் பிறவியே விசனம்-ஸ்த் ஸ்ரிக் கமக பமகா ஸங்கீத கூடத்தில் இசைக்கும். ஏதோ ஒரு யாழ், சிந்தனாஸ்வரத்தை எடுத்துக்கொள்கிறது. 'அவதாரமாம்! என்ன அவதாரம்? பலப்பரீட்சையில் தோளைத் தட்டிக்கொள்வதற்குத்தானா அவதாரம்? என் பிறவியின் எல்லைகள் என்னை அவ்வப்போது மட்டம் தட்டிதான் வைத்திருந்தன. ஆயிரம் ராமர்களும் உனக்கு ஈடாவரோ?’ என்று குஹன் பரதனைச் சிலாகித்தபோதே; நான் மட்டுப்பட்டுவிட்டேன். பெண்புத்தி பின்புத்தியில் மயங்கி மானைத் தொடர்ந்து ஏமாந்தேன். அதன் வினை வாக எத்தனையோபேர் வினைகளுக்கு இடம் கொடுத்தேன். 'வாலியை நான் மறைந்து கொன்ற பழி, நான் மறைந்த பின்னரும் என்னைக் கருவறுத்துக் கொண்டிருக்கப்போகிறது. இவ்வுலகம் உள்ளளவும் அதில் தெய்வ நம்பிக்கைகளும் இதிஹாஸ புராணங்கள் பேசப்படும் வரையிலும், துஷ்ட திக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் என்று என் அவதார மஹிமைக் குள், வாதங்கள் என்னை ஒளித்து வைத்தாலும், மனிதப் பிறவியின் சுயநலம், அதனால் செய்த கொலை அது இல்லை யென்று சொல்ல முடியுமா? nதை மயக்கம் அப்பா, விதை மயக்கம்! " பூரீராமன் தற்கேலியில் சிரித்தான்,

  • மற்றும், வாலி அரசைப் பிடுங்கி சுக்ரீவனுக்குக் கொடுக்க நான் யார்? அதேபோல், ராவணன் இருக்கையி: லேயே "இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்யம்” என்று வாரி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/79&oldid=1403508" இலிருந்து மீள்விக்கப்பட்டது