பக்கம்:நேசம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74லா. ச. ராமாமிர்தம்


வழங்கிவிட்டேன். இதுதான் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தல். இதில் இன்னொரு வேடிக்கை பார். என் அரசே எனக்கில்லை. இன்னும்தான் அது எனக்குச் சொந்தமில்லை. என்ன விழிக்கிறாய்? இது பரத ராஜ்யம்தான். ராமராஜ்யமில்லை. 'என் மகன் நாடாளனும், ராமன் காட்டுக்குப் போக வேண்டும்’ என்று என் மாற்றாந்தாய் என்று எண்ணினாயா? நீ ஸாrாத் பரமேசுவரனின் அவதாரம், மூன், பின், நடுவற்று, ஏற் கெனவே அழிவற்ற உனக்கு அவள் வழங்கியிருக்கும் சிரஞ்சீவி வரம் இந்த ஜன்மாவை நீ அலங்கரித்துக் கொண்டிருப்பதற்கு உன் காதில் தொங்கும் குண்டலம் ஒன்று தவிர அதற்குத் தனிப் பலிதம் இல்லை என்றே சொல்வேன். நிமித்தமாகப் பிறந்தோ, அல்ல பிறந்த பின் நிமித்தத்தைத் தேடியோ முனைவதில் ஈடுபடும் எந்தப் பிறவியும் அவதாரமே. 'அசுரர்களை ஏமாற்றி, அவர்களும் சேர்ந்து கடைந் தெடுத்த அமிர்தத்தைக் குடித்துவிட்டு, மந்தர்களாகிய தேவர்களைக் காட்டிலும், சுயமுயற்சியில், விடாமுயற்சியில் பிறவியின் அர்த்தத்தைத் தேடும் மனித ஜன்மம் மாண் புடைத்து, நரனை நிரூபிக்கவே நான் வந்தேன். "'என் பிறவியின் நிமித்தம் ராவணஸம்ஹாரம் அல்ல' அது இடை வந்தது. அதற்கென்றே, அவன் குலத்தை வருடன் அறுக்கவே அவள் தோன்றினாள். சீதை பிறக்க, ல ங் ைக அழிய' -நந்தவனத்தின் மற்றோரத்தினின்று சிரிப்புக் கொத்துக்களிடையே, அந்தரத்தில் எழும்பி அங்கு நேரத்துக்குமேல் சோம்பினாற்போல் நொடியிலும் நொடி கூட நின்ற பந்தின்மேல் ராகவனின் நாட்டம் லேசாய்ச் சாய்ந்தது. - ராமன் முகத்தில் சட்டென்று புன்னகை தவழ்ந்தது. 'இதுபோல், கன்னி மாடத்தில் இவள் பந்தாடுகையில் சிவதனுசடியில் ஒடிவிட்ட பந்தையெடுக்க, வில்லை ஒரு கை யால் தூக்கியதைத் தற்செயலாகப் பார்த்துவிட்ட என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/80&oldid=1403509" இலிருந்து மீள்விக்கப்பட்டது