பக்கம்:நேசம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம தர்மம்77


"ராமா.ராமா!-கிழவர் செவிகளைப் பொத்திக் கொண்டார். மனிதப் பிறவியின் சுமை என்னென்று கண்டாயா? வெளியில் காட்டிக்கொள்ள முடியாத புழுக்கங்கள். இ வ. களைத் தாங்கிக்கொள்ளத் தன்னைக்காட்டிலும் பெரும் பாரத்தை ஒண்டியாக இழுக்கும் எறும்பின் பலம் வேண்டி யிருக்கிறது. - அனுமன் ஆறுதலாக அவர் பாதங்களைத் தொட்டு வருடினான். அது இல்லாமல் அவனால் முடியாது. "ரகு வீரா, ஒன்று கேட்கிறேன். ராவண ஸம்ஹாரம் இல்லையெனில், உங்கள் பிறவியின் நிமித்தம்தான் என்ன?” பிதுர்வாக்க பரிபாலனம்’-வார்த்தைகள் அமைதி யாகத்தான் வந்தன. ஆனால் அக்ஷரத்துக்கு ஆகrரம் ஒரு முழுமை, உருண்டை வடிவம் பெற்று, என்ன அழுத்தம், தீர்மானம், கம்பீரம்:

  • அப்பா:’’.

அனுமனுக்கு ரோமங்கள் குத்திட்டன. தென்றலா? தசரதனின் ஆசிமூச்சா? ததாஸ்து. தரிசனம் என்று தனியாக இல்லை. நித்யத்துவத்தினின்று. சொட்டென ஒரு தருணம் உதிர்ந்து தொட்டுவிட்டு நகர் கின்றதே அது தான் தரிசனம் ததாஸ்து, அந்தக் காலப்ரமாணம் வீதையையும் கவ்விற்று. பந்தாட்டத்தின் நடுவில் திடீரென்று பந்தைத் தேடிக் கொண்டு தோழிகள் அனைவரும் மூலைக்கொருவராய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/83&oldid=1403512" இலிருந்து மீள்விக்கப்பட்டது