பக்கம்:நேசம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80லா. ச. ராமாமிர்தம்


ரீதிகெளளையின் விவரமான விஸ்தரிப்பு, இன்று சபேசனின் எண்ணத்தில் இல்லே 'ராகரத்ன மாலிக ஜேலேசாகத் தட்டிவிட்டதும், ஷண்முகப்ரியாவுள் புகுந்து ஆலாபனையையும் பாட்டையும்-"மரிவேறே திக்கவரய்ய ராமா அதுதான் சற்றுத் துரிதம்- 'சிக்" கென முடித்துக் கொண்டு, ஸ்வரங்களை அள்ளி வீசி, மிருதங்கத்தின்மேல் சரக் கூடு கட்டிவிட வேண்டும் என்று திட்டம். அதையும் முன்கூட்டிச் சாமாவோடு பங்கிட்டுக் கொள்ளவில்லை . அப்படிக் கலந்துகொண்டிருந்தாலும் சாமாவுக்கு ஆட்சேபம் இருக்காது. மைலம் வாசுவை பொக்கை வைக்கவேண்டியது தான. முனு நாலு தடவையாக அவனைத்தான் சகாக்காரர் o f سهم مهم : مهم برای ఫి. ~ ~ - م وية * 懋 متر مرمت கள், சபேசன் சகோதரர்களுக்குப் போட்டு வருகிறார்கள். முழுச் சோரூபத்தை அவர்களிடம் அவன் இன்னும் காட்ட ஆரம்பிக்கவில்லையென்றாலும், .ே பா ன தடவையே, ஆட்டுக்கு வால், லேசாக ஆட ஆரம்பித்துவிட்டது. இந்தச் சங்கீத களம் இருக்கிறதே, இதில் உழைப்பில் தானே முன்னுக்கு வருவது என்பது ஒன்று வேறு காரணங் கனாக அக்கறை கொண்டவர் வேண்டியப்பட்டவரைப் பின்னாலிருந்துத் தள்ளி முன்னுக்குக் கொண்டுவருவது மற்றொன்று முன்னது குதிரைக் கொம்பு பின்னதன் குரல் ளைப்பிடியில், சுயத்தகுதி திணறிற்று. இந்த நிலைமை எங்கும்தான் உளது எனினும், இங்கே பூசாரிகளின் கொடுமை கூட இப்பவே நம் மேடை வயசுக்கு, மேடையில் தம்மை முழு டிக்கெட்டுகளாக பாட்டிலும் 'ரேட்டிலும்’ ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே, இது நிஜந்தானா? அப்பப் போ, மேடையிலேயே கண்ணைக் கசக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் :இந்தப் பக்கவாத்தியக்காரன் எனக்கு வேண்டாம்-என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/86&oldid=1403514" இலிருந்து மீள்விக்கப்பட்டது