பக்கம்:நேசம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா81


சொல்வது நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. என் குழியை நானே தோண்டிக்கொண்ட மாதிரிதான்-சூத்ரதாரி கள் அவ்வளவு நுட்பமாகப் பலகையைத் தட்டிவிடுவார்கள்.

ஆயினும், இந்த மைலம் வாசு, போகப் போக வம்பு தருவான் போலத்தான் தோன்றிற்று. அவனும் மேடை ஏறி நாளாகவில்லை. ஆனால் இசை வட்டாரத்தில் காலியென்று பேர் வாங்கிவிட்டான். ஒரு பெரிய அரசியல் புள்ளியின் பிள்ளை. அப்பன் வழியில் போகாமல், இசை மேடைக்கு இவன் ஏன் வந்தான்? ஃபீல்டில் இருக்கிற கஷ்டம் போதா தென்று இவன் சோதனையும் வேனுமா?’ என்று பிழைப்புக காரர்கள் தலையிலடித்துக் கொண்டார்கள். ஆனால் வாய் திறந்து சொல்ல முடியுமா? ஆனால் இவர்கள் புலம்பலிலும், சத்து, செத்தை பிரிப்பது கடினம். எப்படி இருந்தால் என்ன, இப்போ வாசுக்குக் கொடியேற்றம், ஆளும், கடோத்கஜன் மாதிரி.

மேடையை, சர்க்கஸ் "கூண்டாக ஆக்க முயன்றான். வித்வத்தினால் அல்ல. கோமாளித்தனத்தால், சமயமில்லாத இடத்தில், அநாவசியமாக ஒரு தட்டு பாட்டில் நூலேணி ஏறிவரும் கட்டத்தில் வித்வானின் நளினத்தை நசுக்கும் முறையில், படார்’ படார்-அடுத்தடுத்துப் பொளியும் சாப்பாக்கள்.

சபையோர் சிரிப்பு அடங்கினதும், அதற்கு முத்தாய்ப் பாக ஒரு "பிங்ங்ங்...மறுபடியும் பீறிடும் 'கொல்"லுக்கு ஒத்தான் லாய்த் தான் உடல் குலுங்கல் வித்வான் சிவப்பாய் இருந்தால் முகம் குங்குமப் பிழம்பு, நிறம் மட்டாயிருந்தால் கறுங்குழம்பு. வேதனை பார்ப்பதில்தான் என்ன களிப்போ!

ஆச்சு, இன்னும் கொஞ்சநாள் போனால், நான் நடுவில் உட்கார்ரேன். அவர் என்னிடத்தில் உட்கார்ந்து பாடட்டும்' என்று கேட்டால், கேட்பதற்கு ஆள் இருந்தார் கள். அப்படி ஒரு புரட்சியின் பெருமை என்னுடையதாக நே.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/87&oldid=1403518" இலிருந்து மீள்விக்கப்பட்டது