பக்கம்:நேசம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86லா. ச. ராமாமிர்தம்


கவிதா நேரங்கள் எப்படி நேர்கின்றன? அவளாலும் சொல்லமுடியாது. ஷண்முகப்ரியாவின் திட்டம் சபேசனுக்கு அடியோடு மறந்து போயிற்று. திக்கெவரு கண்ணிரை மறைக்கக் கெளரி தலைகுனிந்தாள். "திக்கெவரம்மா அடிக்குச் சாமா பூரண ஆஹ"தி ஆகிவிட்ட தன் பின்னணி நோக்கி அவள் நினைவு, வருடங்களைஏழெட்டு இருக்குமா? ஒன்பது பத்து-கடந்துகொண் டிருந்தது. * அம்பத்துரில் அவர்கள் வசிக்கும் இடத்தில் அப்போ ஐந்தாறு வீடுகள்-இப்போ பரவாயில்லை-தெளித்தாற் போல் ஆங்காங்கே எட்ட எட்ட: அதிலும் அவர்கள் வீடு கீழ்க்கோடி. ஆனால் சபேசனுக்குச், சாதகம் பண்ண அமைதி யான சூழ்நிலை, மேலே வானம், கீழே பூமி. மார்கழி தையில் ஜமக்காளம் விரித்தாற்போல் பூமி பச்சைப் பசேல், பட்சி ஜாலம், முகில் கூட்டங்களின் கம்பீர மேய்ச்சல் தந்திக் கம்பங்களின் மோன சாட்சி. பகலிலே பாம்பு தாராளமாகப் புழங்கும். திருடன் பகல் இரவு பார்க்க வேண்டாம் கண்ணெ திரே வெந்நீர்த் தவலையைத் தூக்கிக்கொண்டே, "அட போம்மா, உன் தொலையாத சொத்துக்குப் போடற கூச்சலைப் பாரு! நல்லாப் போடு" என்று அலுத்துக் கொள்ளலாம். நடுப்பகல், ஒருவாறு காரியங்களை முடித்துக்கொண்டு, கெளரி அப்போதான் கலத்தில் சாதத்தை வைத்துக்கொண் டிருந்தாள். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே ஓடினாள் வாசல் கேட்டுக்கருகே பூவரச மரத்துக்கும் முன்னறையின் ஜன்னல் கம்பிக்கும் இடையே கட்டியிருந்த கொடியில் காய்ந்துகொண்டிருந்த துணிகளின் நடுவிலிருந்து ஓர் இளைஞன், மஜந்தாக் கலர் புடைவையை உருவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/92&oldid=1403521" இலிருந்து மீள்விக்கப்பட்டது