பக்கம்:நேசம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90லா. ச. ராமாமிர்தம்


மன்னிக்கும் நான் என்னதான் செய்யக் கூடாது? செய்யக் கூடாததை மட்டும் சொல்லிக்கொடுங்கள், தெரியாத்தன மாகச் செய்துவிடப் போகிறேன். அதரங்கள் நடுங்கின. சபேசன் குரல் தாழ்ந்து, 'சாமா, நீ உன் அம்மா பாச்சி ரொம்பக் குடிச்சுட்டிருக்கே.' "நான் இங்கே இருக்கேன். கெக்கே பிக்கே சித்தே நிதானமாக இருக்கட்டும்.' இருவரும் திரும்பினர். கெளரி குத்துவிளக்கின் சுடரைத் துண்டிக்கொண்டிருந்தா ள். 'அம்மா தாயே நீ இருக்கையா?” இருவரும் கைக் கூப்பினர். ஒருவன் கேலியாக, மறுவன் உண்மையில் . விளக்கைத் தூண்டும் கெளரி. என்னை இருளிலிருந்து மீட்ட கெளரி. என் அம்மா பேரைத் தாங்கும் கெளரி. அவளும் அவள் தாயை இழந்து இன்னும் ஆறுமாத மாகாத கெளரி. அம்மாவின் இஷ்டக் கவர் என்று அன்று நான் கொடியி லிருந்து உருவிய புடைவையை இன்று உடுத்துக்கொண் டிருக்கும் கெளரி. ஆனால் மூட்டங்களிலிருந்து சாமாவால் முற்றும் விடுபட முடியவில்லை. சமயங்களில் மாலை வேளைகளில் துரத்து விளிம்பை வளைக்கும் ரெயில் பாதையைச் சிந்தித்த படி, பின்னால் கை கோத்த வண்ணம், தன்னையிழந்து அவன் நிற்கையில், அந்தக் கண்களுள், பின்னால், பின் லுக்கும் அப்பால் வெகு வெகு அப்பாலில், கடல் வீக்கத்தின் மேல் ஒரு காகிதக் கப்பல் தத்தளிப்பது, பார்க்கத் தெரிந்தவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/96&oldid=1403526" இலிருந்து மீள்விக்கப்பட்டது