பக்கம்:நேசம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92லா. ச. ராமாமிர்தம்


இரண்டுபேரும் கிணற்றடியில் வந்து நின்றார்கள். திட்டு ஒயாமலே கெளரி சாமாவை முதலில் உட்காரச் சொன்னாள். 'ஏன், இங்கேயும் நான் க்யூவா?’’ ஆம்படையான் தலையில் ஆம்படையாள் கொட்ட லாகாது: 'சாமா உங்களுக்கு ஸ்நானம் பண்ணிவைக்கட்டும். எது இந்த நாளில் மலிவு? தலையைச் சுத்தி அவன் கேட்டதை எரிஞ்சுடறதுதானே? இருக்கும் விலைவாசி அவனுக்கு இல்லையா? ஏதோ இந்தமட்டுக்கும் மிச்சம் பிடிச்சுட் டேவே '’ "ஆமாம். நான் இப்படியெல்லாம் மிச்சம் பிடிக்கறதை ஈடு பண்ணத்தான் ஒருநாள் விட்டு ஒருநாள் எண்ணெய்க் கடாயை அடுப்பில் ஏத்தி ஆறதே! பஜ்ஜி, பக்கோடா மசால் வடை, ஒமப்பொடி, அடை, சிப்ஸ், எல்லாம் வதக்கல்தான் . வேகவைச்சுப் பண்றதுன்னு ஒண்னு இருக்கு என்பதே உனக்கு மறந்துபோச்சு என்று நினைக்கிறேன்.' "ஆமாம், அத்தனையும் என் ஒண்டி வயிற்றுக்குக் கொட்டிக்க. நாக்கைக் கொட்டிண்டு திங்கறதில் குறைச்சல் இல்லை. கடைசியில் அரைச்சவளுக்கு ஆட்டுக்கல். வார்த்த வளுக்குத் தோசைக்கல்.’’ 'அட, நல்லாயிருக்கே கதை? பண்ணினால், தின்க றோம்! தொட்டி முற்றத்தில் தூக்கி எறியச் சொல்கிறையா?” 'சரி, அப்படித்தான் போங்கோ. காய்கறிகள் இந்த நாள் ருசிதான் மாறிச்போச்சு, கண்ணாலேயாவது பள பளன்னு பார்க்கப்படாதா? ஆத்துக்காரரும் தம்பியும் சம்பா திச்சுக்கொண்டுவந்து போடறப்போ இந்த உரிமைகூட

  • 瑟 新

இத்தனை நாள் கழிச்சு எனக்கு இருக்கக் கூடாதா? 'தம்பியா? அது யாருடா, தம்பி?’’ "'இதோ இவன்தான்!” சாமா தலையில் "ணக்கென்று குட்டினாள். வேறு பிறந்தாத்து உறவு எனக்கென்ன தட்டுக் கெட்டுப் போறது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/98&oldid=1403528" இலிருந்து மீள்விக்கப்பட்டது