பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.இரண்டில் ஒன்று!


ஆறு வயது இருக்கலாம்;
அந்தச் சிறிய வயதிலே
நேரு வீட்டில் நடந்தஓர்
நிகழ்ச்சி தன்னைக் கூறுவேன்;

ஆரும் இல்லா வேளையில்
அப்பா வுடைய அறையிலே
நேரு மெல்ல நுழைந்தனர்;
நெருங்கிச் சென்றார் மேஜையை

அழகுப் பேனா இரண்டினை
அங்கே நேரு கண்டனர்;
பளப ளக்கும் அவற்றையே
பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர்.

“அருமைப் பேனா இரண்டுமே
அப்பா வுக்குத் தேவையா?
இரண்டில் ஒன்றை நானுமே
எடுத்துக் கொள்வேன்” என்றனர்.

17