பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஆனந்த பவனம்

வக்கீல் தொழிலில் மோதி லாலும்
வருவாய் அதிகம் பெற்றார்;
மிக்க பேரும் புகழும் பெற்று
மேதை யாகத் திகழ்ந்தார்.

மெத்தப் பெரிய வீட்டை அவரும்
விலைக்கு வாங்க லானார்;
புத்தம் புதிதாய் அதனை அமைத்துப்
புதுமை பலவும் செய்தார்.

அந்த நாளில் அந்த ஊரில்
அந்த வீட்டில் மட்டும்
விந்தை யாக மின் விளக்கு
வீடு முழுதும் எரியும்.

27