பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.வந்து ஜவஹர் காலடியில்
மயங்கி வீழ லானதுவே:
அந்தக் காட்சி ஜவஹரையே
அதிகம் கலக்கி விட்டதுவே.

“எவர்க்கும் கெடுதி செய்தறியேன்.
என்னைச் சுட்டது சரிதான?’’
ஜவஹரைப் பார்த்துக் கேட்பதுபோல்
தரையில் கிடந்தது மான்குட்டி.

கண்ணீர் சிந்தும் மான் அதனைக்
கண்டார் ஜவஹர்; கண்டதுமே
புண்ணாய்ப் போனது அவர்மனமும்.
புழுங்கிக் கண்ணீர் விட்டனரே.

"துப்பாக் கிதனை இனிமேல்நான்
தொடவே மாட்டேன்: சத்தியமே.
இப்படி ஜவஹர் கூறினரே
இறுதி வரையில் காத்தனரே.

33