பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சென்னை வானொலி சிறுவர் சங்கப் பேரவைத் தலைவர்
புலவர், கவிஞர்
தணிகை உலகநாதன் அவர்களின்
அணிந்துரை

சில ஆண்டுகளுக்கு முன்னே நடந்தது, இன்னும் என் உள்ளத்தில் பசுமையோடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி, நினைக்க நினைக்க உள்ளத்தில் இன்பத்தேன் துளிக்கிறது, சென்னை வானொலி நிலையத்தார் குழந்தைகள் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த நீதிபதி எஸ். மகராஜன் அவர்கள் தமது பேச்சு முடிவில், குழந்தைக் கவிஞர் - பிள்ளைக் கவியரசு - அழ. வள்ளியப்பாவின்


'அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே.
இளைஞர் நேரு பிறந்தது
இங்கி லாந்து நாட்டிலே.
தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே,’

என்னும் பாடலைப் பாடினார். அவ்வளவுதான்; கூடியிருந்த குழந்தை ரசிகர்களின் கைதட்டல் வான்முட்ட அதிர்ந்தது. அன்றைய வானொலி நிலைய இயக்குநராக இருந்து, இன்று தொலைக்காட்சி டைரக்டர் ஜெனரலாக இருக்கும் திரு. பி. வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேடையில் ஒரு துள்ளு துள்ளினர் ‘நேருவின் நினைவை மழலைச் செல்வங்களின் மனத்தில் புதிய வைக்க இதைவிடச் சிறந்த பாடல் என்ன இருக்கிறது?' என்று வியந்து பாராட்டினார்,