பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

என்னும் பாடல் நேரு அவர்களுக்குக்குழந்தைகளிடம் இருந்த பேரன்பையும் பெருமதிப்பையும் காட்டுகிறது.

ஒரு நாள் நேருவை வீட்டில் காணவில்லை. எங்கும் ஒரே பரபரப்பு; அதிகாரிகளும் காவலரும் பல இடங்களிலும் தேடி அலைந்தனர், முடிவில் நேரு அவர்கள் பூங்கா ஒன்றில் குழந்தைகளின் ஆடல்பாடல்களைக்கண்டு களித்துத் தாமும் அவர்களுடன் கும்மாளமடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தனர். இந்த நிகழ்ச்சி பற்றிக் குழந்தைக் கவிஞர் எவ்வளவு அருமையாகப் பாடுகிறார், பாருங்கள்:

கோடை வெயிலைப் போன்றது என்றும்
அரசியல் உலகம் தான் .
குளு குளு தென்றல் காற்றைப் போன்றது
குழந்தைகள் உலகம்தான்

என்று நேருவின் குழந்தை உள்ளத்தையும் தெள்ளத் தெளி வாக எடுத்துக் கூறியுள்ளார்.

பழங்காலத்திலே தற்கால வசதிகள் யாவும் நிறைந்த 'ஆனந்த பவனம்' என்னும் தமது மாளிகையை நாட்டுக்குத் தானம் செய்தவர் ஜவஹர்லால்.

'இந்த நாடே எனது வீடு
என்றி நினைத்த நேரு
சொந்த வீட்டை நாட்டி னுக்கே
சொந்த மாக்கி விட்டார்'

என்று பாடியது நேருவின் நாட்டுப்பற்றையும் வள்ளல் தன்மை யையும் காட்டுகிறது.

வேட்டைக்குச் சென்ற ஜவஹர், மான்குட்டி ஒன்றைச் சுட்டார், பாவம்! அந்த மான்குட்டி அவர் காலடியில் வந்து விழுந்து,

எவர்க்கும் கெடுதி செய்தறியேன்;
என்னைச் சுட்டது சரிதானா?

என்று கேட்பது போல் கண்ணீர் சிந்தியது.

கண்ணீர் சிந்தும் மான் அதனைக்
கண்டார் ஜவஹர்; கண்டதுமே,
புண்ணாய்ப் போனது அவர் மனமும்;
புழுங்கிக் கண்ணீர் விட்டனரே.