பக்கம்:நொண்டி நாடகமும் அருள் மலை நொண்டியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ) பகல்வெத்தி ஒரு சாதுவைப்போல வேடமணிந்து சென்னி மலைக்குப் புறப்படுகிருன், இவன் நல்ல நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவன். அவன் கூறுவதைக் கேளுங்கள் : புசமேல் தரித்துக்கொண்டேன்-மெய்யில் பூசிக்கொண்டேன்கையை வீசிக்கொண் டேன் சங்கும் சேகண்டியும்-உத்திராகம் தரித்துக்கொண் டேன்மனதில் சிரித்துக்கொண்டேன் செங்கையில் பிரம்பெடுத்தேன்-மார்பில் செச்சையுட னேலிங்கம் வைச்சுக்கொண் டேன் பார்த்திள மயிலிரட்டை-திருற்ேறுப் பையுமுத்தி ராகrங் கையிலெடுத் தேன் பாதக்குறட்டு மேலே-சுருக்காய்ப் படக்குப் படக்கென்று நடக்கையிலே வீதியில் கண்டபேர்கள்-காலில் வீழ்ந்தா ரேசுத்திச் சூழ்ந்தாரே கொடுத்தேன் திருநீற்றை -கைகட்டிக் கொண்டு குனிங் தேமெள்ளத் தண்டனிடுவார் படுப்பார் எழுந்திருப்பார்-திருநீற்றைப் பாங்குட னேமெள்ள வாங்கிக்கொள்வார். அவனே உண்மையான சாது என்று நம்பி ஒருவர் தம் வீட்டில் விருத்துக்கு அழைக்கிருர், அன்னமிட்ட வீட்டில் கன்னமிடுவது அவன் தருமமாம். அதனால் இரவிலே விருங் துண்ட பிறகு அங்கேயே உறங்கும்போது தன் தொழிலே நடத்துகிருன். ஏராளமான பொருள் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு பல ஊர்களுக்கு புறப்படுகிருன். இறுதியில் பவானி வருகின்ருன். - - w . . . . . . . . அங்கே கோயிலில் ஒருத்தி கடனம் ஆடுகிருள். அவள் நல்ல அழகி. கிருஷ்ணன் கண்டால் அட்ட லகடிமிகளையும் விட்டு விட்டு இவளேத் தி ரு ம ண ம் செய்து கொள்வாளும். பாட்டைக் கேளுங்கள் : இட்டமுடன் கிருஷ்ணன் கண்டாலோ-லக்ஷ்மி எட்டுப் பேரை விட்டுத் தாலி கட்டிக் கொள்ளுவானே சட்டமுடன் தங்திமுகன் கண்டால்-கல்ல தாரமென்று கலியான காரியஞ் செய்வானே மாதவர் மகாமுனிவர் கண்டால்-தவம் மாற்றியவள் வீடுதரிைல் காத்துமிருப் பாரே