பக்கம்:பசி கோவிந்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 13

அதாகப்பட்டது, இருப்பவனைக் கண்டு இல்லா தவன் செருக்கடைய வேண்டும் என்கிருர்-ஆமாம், படித்துச் செருக்கடைவதைவிட, பணக்காரனைப் பார்த்துச் செருக்கடைவது மேல் என்பது இங்கே உட்பொருள்-அடி வயிறு கிள்ளும்போது அடியேன் எப்படிச் செருக்கடைவது?’ என்று அதிகப்பிரசங்கித் தனமாகக் கேட்டு விடாதீர்கள்!-சொன்னதைச் செய் யுங்கள். அதுவே சொர்க்கத்துக்கு வழி; அதுவே துன்பத்தைப் போக்கும் இன்பத்துக்கும் வழி:

அக்த வழியை அவர் சாதாரணமாகவா சொல் கிருர்?-இல்லை; வேண்டாமை என்னும் செருக்கு” என்று உறுதியாகச் சொல்கிரு.ர்.

ஆஹா, எவ்வளவு பெரிய உண்மை!-'அவனிடம் பணம் இருக்கிறது; அதனுல் அவனுக்குத் துன்பம். என்னிடம் பணம் இல்லை; அதனுல் எனக்கு இன்பம்’ஆஹாஹா, எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு லேசாகச் சொல்லிவிட்டார்!

இனி ஏன் உங்களுக்கு ஏக்கம்? ஊக்கம் கொள் ளுங்கள்; உழைத்தாலும் உழைப்புக்குத் தக்கபடி ஊதியம் கிடைக்காவிட்டாலும் ஊக்கம் கொள்ளுங் கள். அந்த ஊக்கம் கடைசியாக உங்களைத் துாக்குக் கயிற்றில் தொங்கவிட்டாலும் சரி, ஊக்கம் கொள் ளுங்கள்!

அதுவே உபாயம்; மற்றவை அபாயம்"யாருக்கு?’ என்று கேட்க வேண்டாம்; அது பிரம்ம ரகசியம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/15&oldid=590879" இலிருந்து மீள்விக்கப்பட்டது