பக்கம்:பசி கோவிந்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பசி கோவிந்தம்

சொர்க்கம் மெய், சொர்க்கம் மெய்

சொர்க்கம் மெய், சொன்னேன்!

தர்க்கம் நீ செய்யாமல் தேடு,

ததிங்கிண தோமென்று ஆடு!

பொய்! - சொந்தம் சுற்றம், பந்தம் பரிவாரம் எல்லாம் பொய்; பொருளற்ற பொருள்கள். அவற்றின் மேல் பற்று கொண்டு, உன் குடும்பத்தில் நீ ஒற் றுமையை வளர்க்காதே!-அந்த ஒற்றுமையால் ஊர் ஒற்றுமைப்பட்டுவிடும்; உலகம் ஒற்றுமைப்பட்டு விடும்; அவ்வாறு ஒற்றுமைப்பட்டுவிட்டால் பதிதன் என்றும் புனிதன் என்றும், பாவி என்றும் புண்ணிய வான் என்றும் எங்களால் பிரித்துப் பேசமுடியாமற் போய்விடும் - மகனே! அவர்கள் யார், நீ யார்? - உதவாதே! ஒருவர்க்கொருவர் உதவுவது, அதன் மூலம் ஒற்றுமையை வளர்ப்பது என்பதெல்லாம் வேண்டாம்; பின்னல் நீ சோற்றுக்குத் தாளம்போட கேர்ந்தாலும் வேண்டாம் - ஒடு, சொல்லாமல் ஒடு! - நீ பற்றவேண்டிய பொருள் ஒன்றே; அதுதான் கோவிந்தன் திருவடி - இல்லாத திருவடியை எப்படி நான் பற்றுவேன்?’ என்று ஏங்காதே! - தேடு, எங்கும் நிறைந்தானே த் தேடு! - இல்லாத இடமில்லானை ஏன் தேட வேண்டும்? தொட்ட இடமெல்லாம், கை பட்ட இடமெல்லாம் அவன்தானே இருக்கப் போகிருன்?’ என்று கேட்காதே! - ஆடு, ததிங்கினதோம்’ என்று ஆடு - சோறு கிடைக்காவிட்டாலும், சொர்க்கம் உனக்கு நிச்சயமாகக் கிடைக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/20&oldid=590884" இலிருந்து மீள்விக்கப்பட்டது