பக்கம்:பசி கோவிந்தம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பசி கோவிந்தம்

கேட்டால் கவலை தீர்ந்துவிடும் அப்பனே, கவலை தீர்ந்துவிடும்-கேட்காமல் கவலைப்படு!-அப்பொழுது தான் அன்பு மனைவியையும் ஆசைக் குழந்தையையும் உன்னுல் துறக்க முடியும்; அடுத்த வேளைச் சாப் பாட்டையும் அதற்கு வேண்டிய காசையும் உன்னுல் மறக்க முடியும்?

என்ன யோசிக்கிருய், ஏன் திரும்பிப் பார்க் கிருய்?-அழகும் அற்புதமும் நிறைந்ததுதான் இந்த உலகம்; இல்லையென்று நாங்கள் சொல்லவில்லை. ஆனல் அதற்கும் உனக்கும் சம்பந்தம் கிடையாது; அந்தச் சம்பந்தம் எனக்கும் என் ஆசானுக்கும் மட்டுமே உண்டு-இது உலக மகா ரகசியம்!-இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் சதா அந்த உலகத்தைப் பற்றியே நீ கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்ருல் என்ன செய்ய வேண்டும்?-மறுபடி யும் சொல்கிறேன் :

நீ எங்கிருந்து வந்தாய்?-அம்மாவைக் கேட் காதே!

நீயாகவே உண்டாயைா? - அப்பாவைக் கேட் காதே!

கேட்டால் கவலை தீர்ந்துவிடும். கேட்காமல் கவலைப்படு, கவலைப்படு, கவலைப்பட்டுக் கொண்டே

இரு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/26&oldid=590890" இலிருந்து மீள்விக்கப்பட்டது