பக்கம்:பசி கோவிந்தம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பசி கோவிந்தம்

என்பதற்காக காஸ்திகரை வெறுக்க வேண்டியதில்லை; ஏனெனில் க ட க் கி ற ப டி கடந்து கொண்டால் காஸ்திகரே ஆஸ்திகரை வெறுத்துவிடுவார்கள்!

ஆயினும், அவர்களுடைய கூட்டம் பெருகிவிடக் கூடாது-அதற்கு வழி என்ன?-அவர்களுடைய அறியாமைக்காக BTLh அனுதாபப்படுவதுபோல் அடிக்கடி பாசாங்கு செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்திய வெற்றி நமக்குக் கிடைக்கும். அதுவே மூச்சை அடக்கும் முக்தி என்னும் லாபத்தை மக்களுக்குக் காட்டி, அவர்களுடைய பேச்சை அடக்கும் பக்தி என்னும் வியாபாரத்தை காம் தொடர்ந்து நடத்தச் சிறந்த மார்க்கம்.

பாசமும் பற்றும், ஆசையும் கேசமும், அன்பும் அறமும் மனித வாழ்க்கையில் இலையும் பூவும் காயும்

போல ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றுபவை. அவற்றை ஒரேயடியாகத் தீர்த்துக் கட்ட முடியாது; ஒவ்வொன்ருகத்தான் தீர்த்துக் கட்டவேண்டும்.

முதலில் பக்தியால் சட்டையைக் கழற்றி எறியலாம்; இரண்டாவதாக ஞானத்தால் வேட்டியை அவிழ்த்து எறியலாம்; மூன்றுவதாக இருப்பது முக்தி ஒன்றே. அதற்குத் தடையாயுள்ள கோவணத்தையும் பிடுங்கி எறிந்துவிட்டால், அப்புறம் சிதையில் தள்ளித் தி வைக்க வேண்டியதுதான் பாக்கி!

இவ்வளவு சுலபமாக நீங்கள் வீடு பெற வேண்டின் ஆஸ்திகர்களுடன் சகவாசம் செய்யுங்கள்; காஸ்திகர் களுடன் சகவாசம் செய்ய வேண்டாம்.

இது முளே புள்ள சிலருக்கு முரண்பா டாகத் தோன்றலாம்-அவர்களுக்கு ஒரு வார்த்தை-முரண் பாடே தத்துவம்; தத்துவமே முரண்பாடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/28&oldid=590892" இலிருந்து மீள்விக்கப்பட்டது