பக்கம்:பசி கோவிந்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 27

இதுவரை உங்களில் யாருக்காவது, எதிலாவது சந்தேகம் உண்டா?-இல்லையென்ருலும் சரி, உண்டு என்ருலும் சரி-ஆசானைப் பொறுத்தவரை அவருக்கு எதிலுமே சந்தேகம் இல்லை. அவருக்கு இல்லாத சந்தேகம் அடியானுக்கு மட்டும் எப்படி இருக்க முடியும்?-மேலே சொல்கிருர் :

காணுத உண்மையைக் கண்டேனடா ! கண்டதை உன்னிடம்

சொல்வேனடா ! வயோதிகம் வந்ததும் வாலிபம் போம் ! வாலிபம் போனதும்

வயோதிகங் காண் !

பார்த்தீர்களா, எப்பேர்ப்பட்ட உண்மையை எவ்வளவு சுலபமாகக் கண்டு பிடித்து விட்டார். எங்கள் ஆசான்!-உங்களில் யாருக்காவது வற்றிப் போன குளங் குட்டைகளில் தண்ணிர் இருக்காதென்று தெரியுமா?-அது எங்கள் ஆசானுக்குத்தான் தெரி யும். உங்களில் யாருக்காவது வயோதிகம் வந்ததும் வாலிபம் போய்விடும் என்று தெரியுமா?-அது எங்கள் ஆசானுக்குத்தான் தெரியும். உங்களில் யாருக்காவது வாலிபம் போனதும் வயோதிகம் வந்துவிடும் என்று தெரியுமா?-அதுவும் எங்கள் ஆசானுக்குத்தான் தெரியும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/29&oldid=590893" இலிருந்து மீள்விக்கப்பட்டது