பக்கம்:பசி கோவிந்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 29

ஏ, செல்வச் சீமான்களே! நம்மிடம் பணம் இருக் கிறது, பாக்கியம் இருக்கிறது, நமக்கென்ன குறை?" என்று கர்வம் அடைய வேண்டாம். அப்படி அடைக் தால் வேதாந்தத்தைக் கை வி ட் டு விட்டு, 'துரதிர்ஷ்டத்தைக் காட்டி அடியான் உங்களைப் பயமுறுத்த கேரும்-ஜாக்கிரதை! அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டமாகும்போது அத்தனையையும் ஒரே கி.மி ஷத்தில் இழந்துவிடுவீர்கள்!-ஆமாம், சொல்லிவிட் டேன்-அப்படி இழக்காமலிருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?-இல்லறத்தை விட்டுத் துற வறத்தை மேற்கொள்ள வேண்டும்; அடைய முடி யாத பேரின்பத்துக்காக அடையக்கூடிய சிற்றின்பத் தைக் கைவிட வேண்டும்; பணத்தையும் பாக்கியத் தையும் துச்சமாகக் கருதும் பக்குவ கிலையை அடைய வேண்டும். -

ஆஹா! அந்தப் பக்குவ நிலையை நீங்கள் அடைந்து விட்டால் எங்களுக்கு என்ன குறை? எங்கள் மடத்துக்குத்தான் என்ன குறை?-பணத்தைத் துறந்தாலும், பசியைத் துறக்க முடியாத காங்கள் பக்குவமாகக் காலத்தைக் கடத்தி விடுவோமே!

அந்தோ, சொப்பவைஸ்தையிலுள்ள சுகம் உங் களுக்குத் தெரியவில்லையே, என்ன செய்வோம்? எப்படி உங்களை ஏய்ப்போம்?

12

GLTചു. - வாழ்வுக்குத்தான் வேதாந்தம் வேண்டாம்; சாவுக்குமா வேதாந்தம் வேண்டாம்? உங்களுக்குத்தான் அதற்கு நேரமில்லை; எங்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/31&oldid=590895" இலிருந்து மீள்விக்கப்பட்டது