பக்கம்:பசி கோவிந்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பசி கோவிந்தம்

என்று சொல்லிப் பார்த்தோம்-நீங்கள் கேட்க வில்லை; எண்ணத் தொலையாத ஜன்மங்கள்’ என்று எண்ணுமலே சொல்லிப் பார்த்தோம்-அப்பொழுதும் நீங்கள் கேட்கவில்லை. ஜன்மத்துக்கு ஜன்மம் வாழும் போதும் மனைவி மக்கள்’ என்கிறீர்கள்; சாகும்போதும் மனைவி மக்கள் என்கிறீர்கள்!-இப்படியே போய்க் கொண்டிருந்தால் எங்கள் மடத்தில் காவடிாயதாரி களுக்குப் பதிலாகக் கழுதைகளல்லவா வந்து குடி யேறும் விதவைகள் தரும் சுகத்துக்குப் பதிலாக வேதனையல்லவா மிஞ்சும்:

14

இந்த இலட்சணத்தில் எங்களுக்குள் போட்டி வேறு- என்ன போட்டி?’ என்கிறீர்களா?-உங் களைப் போன்ற பாபாத்மாக்களுக்குப் புண்ணியத் தைச் சம்பாதித்துக் கொடுப்பதில் காங்கள் போட்டுக் கொள்ளும் போட்டிதான்!

போட்டி போட்டி போட்டிடா,

போட்டிநித்தம் போட்டிடா! இருட்டுச்சாமி இடத்தைப் பிடுங்க

திருட்டுச்சாமி போட்டிடா! திருட்டுச்சாமி இடத்தைப் பிடுங்க

இருட்டுச்சாமி போட்டிடா! போட்டி போட்டி போட்டிடா,

போட்டிநித்தம் போட்டிடா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/34&oldid=590898" இலிருந்து மீள்விக்கப்பட்டது