பக்கம்:பசி கோவிந்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 33

சாமிகளில்-அதாவது, சங்கியாசம் வாங்கிக் கொண்ட சாமிகளில் இரண்டு விதம் உண்டு. ஒன்று இருட்டுச் சாமி, இன்னென்று திருட்டுச் சாமி. இதையே பரம்பரைச் சாமி, பஞ்சத்துச் சாமி என்றும் சொல்லலாம். இந்த இரண்டு சாமிகளுக்கும் வேஷம் ஒன்ருயிருந்தாலும் வயிறு பிழைக்கக் கை யாளும் முறைகள் வெவ்வேருயிருக்கும். அது எப் படியென்ருல் பிச்சை எடுப்பதும் தானம் பெறுவதும் ஒன்ருயிருந்தாலும், சிலரால் வெவ்வேருகக் கருதப் படுவது போல!

மேலும், இருட்டுச் சாமியாகப்பட்டது வீட்டுக்கு வீடு தேடி வராது. கால்களுக்குக்கூட வேலை கொடுக்காமல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்த படி, தனக்கு வேண்டியதை தானமாகப் பெற்றுக் கொள்ளும்; பகலில் பரலோகப் பிராப்தியை அடைய முயற்சி செய்து, இரவில் இகலோகப் பிராப்தியை அடையும். திருட்டுச்சாமி அப்படி யல்ல; அது வீட்டுக்கு வீடு தேடி வந்து பிச்சை கேட்கும்-யாரும் இல்லாத சமயத்தில் கால்களுக்கு வேலை கொடுப்பது போல் கைகளுக்கும் வேலை கொடுக்கும். போலீஸா ரிடம் சிக்கிக் கொண்டால், அடியேன் திருமங்கை யாழ்வார் பிறந்த திரு கட்சத்திரத்தில் திரு அவதாரம் எடுத்தவன்; விட்டுவிடுங்கள் என்னை; தயவு செய்து விட்டுவிடுங்கள் என்னே!" என்று விஞ்ஞாபிக்கும். விடாவிட்டால், உயிரே உடலென்னும் சிறைக்குள் இருக்கும்போது காம் உலகென்னும் சிறைக்குள் இல்லாவிட்டால் என்ன?’ என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டு, மூன்றுமாத காலமோ ஆறுமாத

  • திருடித் திருப்பணி செய்த பக்தர்களில் ஒருவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/35&oldid=590899" இலிருந்து மீள்விக்கப்பட்டது