பக்கம்:பசி கோவிந்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பசி கோவிந்தம்

காலமோ இருட்டறைக்குச் சென்று வரும்-அதாகப் பட்டது, ஒரு துளி வியர்வையைக்கூட வீணுக்காமல் இகலோகப் பிராப்தியை அடையத்தான் அதற்குத் தெரியுமே தவிர, பரலோகப் பிராப்திக்கு முயற்சி செய்வதுபோல் அவ்வளவு பக்குவமாக நடிக்கத் தெரி யாது. இதல்ை அந்தச் சாமியை இந்தச் சாமி தூற்ற, இந்தச் சாமியை அந்தச் சாமி தூற்ற, போட்டியும் பொருமையும் வளர்ந்து விடுகிறது; விதவைகளாலும் விருத்தர்களாலும் கொடுக்கப்படும் கெளரவம் வீணுகி விடுகிறது-இதுவே கம் மதிப்புக்குகந்த ஆசானின்

கட்சி.

"முற்றுக் துறந்தார்க்குக் கெளரவம் எற்றுக்கு? என வினவற்க; அஃது மயிரினும் ஒம்பப் பெறும்அதாவது, மொட்டை யடித்துக் கொள்ளும்போது ஆசான் மயிரைப் பொருட்படுத்தாமல் இருப்பது போலக் கெளரவத்தைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது எனப் பொருள் கொள்க-எற்றுக் கெனின், காணிக்கை கெளரவத்தில் தொக்கி கிற்றலால்!

15

அன்று தான தருமம் செய்த தனவானின் மனைவி இன்று தரித்திரத்தில் உழன்ருலென்ன? அவளுடைய மக்கள் வறுமையால் வாட்டப்பட்டா லென்ன? வரகரிசிச்சோற்றுக்கும் வாய்க்காலில் ஒடும் தண்ணிருக்குங்கூட வழியின்றி அவர்கள் தெருத் தெருவாய், வீடு வீடாய் அலைந்தால்தான் என்ன , என்ன?-அந்தத் தனவான் அந்த லோகத்தில் ஆனந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/36&oldid=590900" இலிருந்து மீள்விக்கப்பட்டது