பக்கம்:பசி கோவிந்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 39

போடுவது எப்படி ? - தில்லையம்பலத்து ஆடுங் கூத்தன, கமது கையைத் தள்ளாமலிருக்க திருவரங் கத்துப் பள்ளிகொண்ட பெருமான, கம்மைத் தடுக்காமலிருக்க?-அவர்களுடைய கைகள் அசைவ தில்லை; இவர்களுடைய கைகள்தான் அசைந்து தொலைகிறதே! கடவுளே ஏமாற்றினுலும் ஏமாற்றலாம்; இவர்களை ஏமாற்ற முடியாது போலிருக்கிறதே!

என்ன சொல்லி என்னடா,

என்ன செய்து என்னடா? 'உன்னை ஆசை விட்டதா,

என்னை ஆசை விட்டிட? என்னை ஆசை விட்டதா,

உன்னை ஆசை விட்டிட?” என்றுகேட்கும் இந்த நாளில்

என்ன செய்வேன், நானடா!

வருந்தற்க; சொல்வதுபோல் சொன்னல் பொய் யும் மெய்யாகிவிடும். சொல்; சொல்வதைத் தொடர்ந்து சொல் என்கிருயா?-சொல்கிறேன்; தொடர்ந்து சொல்கிறேன் :

ஏ, பாபாத்மாக்களே! என்னைப் பிடித்த ஆசை இன்னும் விடவில்லை என்பது வேறு விஷயம்-உங் க2ளப் பிடித்த ஆசை விட்டதா? விடவில்லை யென் ருல் அதற்காக நீங்கள் ஆண்டவனைக் கூவி அழைக் கத்தான் வேண்டும்- என்னதான் கூவியழைத் தாலும் அவர் எங்கே வரப் போகிருர்? எத்தனையோ வருடங்களாக எத்தனையோ பேர் கூவியழைத்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/41&oldid=590905" இலிருந்து மீள்விக்கப்பட்டது