பக்கம்:பசி கோவிந்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிசி கோவிந்தம் 蘇醫

19

எல்லோருக்கும் மோட்ச சாம்ராஜ்யத்தைக் காட்டிய பிறகு, ஆசானின் ஆனந்தம் இந்தப் பாட்டில் உச்ச நிலையை அடைகிறது. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் என்று அடுக்கி அடுக்கிச் சொல்கிருர்-ஏன், ஆனந்தத்தின் இடையருத தன்மையை வேளை தவருமல் கிடைக்கும் மடத்துச் சாப்பாட்டைப் போல உங்களுக்கு எடுத்துக் காட்ட!

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்

அவனே நினைப்பதே ஆனந்தம்! ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம்

எவனே நினைப்பதே ஆனந்தம்? ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம்

அதைக் கேட்காமலிருப்பதே ஆனந்தம்! ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம்

அதைச் சொல்லாமலிருப்பதே ஆனந்தம்!

அவனை நினைப்பதே ஆனந்தம் என்று சொல்லும் போது, எவனே கினைப்பது ஆனந்தம்?’ என்று நீங்கள் கேட்கக்கூடாது. அப்படி நீங்கள் கேட்காம லிருப்பதும் அதைப்பற்றி காங்கள் சொல்லாமலிருப் பதுமே ஆனந்தம்-தெரிந்து கொள்ளுங்கள்; இப் பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

விஷயத்தை இவ்வளவு சுலபமாகத் தீர்த்துக் கட்டுவதை விட்டுவிட்டு, அவன் யார் என்றுதானே கேட்கிறீர்கள்?-அவன்தான் ஹரி என்று வைணவனும் அவன்தான் சிவன் என்று சைவனும் சொல்லிவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/47&oldid=590911" இலிருந்து மீள்விக்கப்பட்டது