பக்கம்:பசி கோவிந்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 49

21

துாரம் நம்மை எச்சரித்த பிறகு ஆசான் இப்போது அழுகிருர்-ஏன் அழுகிருர்?பிறவிக் கடலைத் தாண்ட வேண்டுமாம்-ஏன் தாண்ட வேண்டுமாம்? - ஊரை ஏமாற்றி, உழைக்காமல் உண்ணத்தான்!-அதற்கு ஆண்டவன் கூறும் ஆறுதல் என்ன?--பாடலைப் பாருங்கள் :

வேண்டுகின்றேன் வேண்டுகின்றேன்

வேண்டுகின்றேன், கடவுளே! பிறவிக்கடல் தாண்டஉன்னை

வேண்டுகின்றேன், கடவுளே!’ 'பிறவிக்கடல் தாண்டவிஷம்

இருக்கும்போது, பக்தனே! என்னை எதற்கு வேண்டவேண்டும்? எடுத்துக்குடிப்பாய், பக்தனே!"

ஆண்டவன் இவ்வாறு சொல்லிவிட்டான் என் பதற்காக அவன் உண்ட ஆலகால விஷத்தை எடுத்துத் தானும் உண்டு பிறவிக் கடலைத் தாண்டி விடவில்லை ஆசான்-அவ்வாறு தாண்டிவிட்டால் அடியான்களின் கதி என்ன?-அதனுல்தான், பிறவிக் கடலைத் தாண்ட வேண்டுமென்று சொல்ல வேண்டிய வர்கள் நாங்கள்; தாண்ட வேண்டியவர்கள் நீங்கள்’ என்கிருர் ஆசான்-தாண்டுங்கள் அதுவே கீதா சுலோகம்; -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/51&oldid=590915" இலிருந்து மீள்விக்கப்பட்டது