பக்கம்:பசி கோவிந்தம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பசி கோவிந்தம்

ம், ஆடு ஆடிக்கொண்டே பாடு!-கானே நீ; நீயே நான்’ என்று வெறும் வாயால் சொல்லி விடுவ தால் ஒன்றும் குடிமுழுகிப் போகாது; தாராளமாகச் சொல், கிட்ட வரும்போது, எட்டி கில்!” என்று அதட்டி விரட்டிவிடலாம்.-ம், ஆடு வெட்கப் படாதே, ஆடு!-தற்குறிகள் மலிந்த தமிழ்நாட்டில் நீ தைரியமாக ஆடலாம்; யாரும் உன்னைப் பார்த்துச் சிரிக்கமாட்டார்கள்-அதற்குப் பதிலாகக் கன்னத் தில் போட்டுக் கொள்வார்கள்; கற்பூர ஆரத்தி காட்டுவார்கள்; காணிக்கை செலுத்திக் கைகூப்பித் தொழுவார்கள்!

இந்தக் கேலிக் கூத்து தொடர்ந்து கடக்கட்டும்; எந்தப் பாவாத்மாவாவது உன்னைத் தேடி வரும். புண்ணியத்தைச் சம்பாதித்துக் கொள்ளவோ, அல்லது புத்திர பாக்கியத்தை அடையவோ தனக்கிருக்கும் சொத்துக்களை யெல்லாம் உன்னுடைய பஜனை மடத் துக்கு எழுதி வைக்கும். அதற்குப் பின் அதை நீ பிருந்தாவன மாக்கிவிடலாம்; பால் பேதமின்றி ஆணும் பெண் ணுமாகச் சேர்ந்து பஜனை செய்ய லாம்; கோவிந்தன் திருவடிக்கு முன்னுல், நீ யார், நான் யார்? உன் மனைவி யார், என் மனைவி யார்? உன் கணவன் யார், என் கணவன் யார்? எல்லாம் ஒன்றே, எல்லாம் அவனே, எல்லாம் அவன் திருவிளையாடலே! என்று இரண்டறக் கலக்கலாம். பாவத்தைப் புண்ணியத்தில் தள்ளலாம்; கரகத்தை மோட்சத்தில் தள்ளலாம்-ஆஹா! எவ்வளவு அற் புதமான வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமான வாழ்க்கை!

ஆடு; ஆடிக் கொண்டே பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/58&oldid=590922" இலிருந்து மீள்விக்கப்பட்டது